இன்றைய நவீன ஸ்மார்ட் சாதனங்களானது இணையத்தை மிக வேகமாக வலம் வருவதற்கான வசதிகளை தருகின்றது.

ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் சாதனங்களானது 2G வலையமைப்புக்களுக்கே ஆதரவு அளிக்கக் கூடியவைகளாக இருந்தமையால் மொபைல் சாதனங்கள் மூலம் பயனர்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை பெற முடியவில்லை.


மொபைல்இணையம்


இருப்பினும் தற்பொழுது அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட் சாதனங்களானது வேகமான இணைய இணைப்பை பெற்றுக் கொள்ளக் கூடிய 3G வலையமைப்புக்களுக்கு மாத்திரம் அல்லாது அதி வேகமான 4G LTE வலையமைப்புக்களுக்கும் ஆதரவு அளிக்கின்றன.


எனவே இன்று அதிகமானவர்கள் இணையத்தை உலா வருவதற்கு தமது ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வேகமான இணைய இணைப்பு மூலம் சிறந்த இணைய அனுபவத்தை பெற முடிந்தாலும் கூட நாம் எமது Android சாதனத்தில் இணைய இணைப்பை செயற்படுத்திய மறுகணமே ஏராளமான செயலிகள் தானாகவே இணையத்துடன் தொடர்புற்று விடுகின்றன.


தொடர்புடைய இடுகை: 


இதனால் மிகக் குறுகிய நேரத்திலேயே அதிகமான தரவுப்பாவனை இடம்பெற்று விடுகின்றது.

எனவே எமது Android சாதனத்தில் உள்ள செயலிகள் இணையத்துடன் தொடர்புபடும் போது அதனை அறிந்து கொள்ளவும் நாம் இணையத்தை பயன்படுத்தும் போது இடம்பெறக்கூடிய இணைய வேகத்தை நேரடியாக கண்காணிக்கவும் உதவுகிறது Internet Speed Meter Lite எனும் Android சாதனத்துக்கான செயலி. 


Internet Speed Meter Lite Android செயலிஇந்த செயலியை எமது Android சாதனத்தில் நிறுவிய பின் எமது Android சாதனத்தில் இடம்பெறக்கூடிய இணைய வேகத்தை Status Bar மூலம் நேரடியாக கண்காணிக்கலாம்.


Internet Speed Meter Lite Android போன் அப்ளிக்கேஷன்


மேலும் உங்கள் Android சாதனத்தில் Mobile Data மற்றும் Wi-Fi வலையமைப்புகளின் ஊடாக  ஒவ்வொரு நாளும் இடம் பெறக்கூடிய இணையப் பாவனையை தனித் தனியாக அறிந்துகொள்ள முடியும்.

அத்துடன் Notification Panel மூலம் தரவேற்றப்படும் இணைய வேகத்தின் அளவையும் தரவிறக்கப்படும் இணைய வேகத்தின் அளவையும் தனித்தனியாக கண்காணிக்கவும் முடியும்.

இவைகள் தவிர ஒரு மாதத்திற்கு அதி கூடுதலாக எந்த அளவு இணையப்பாவனை இடம்பெற வேண்டும் என்பதையும் இந்த செயலியில் அமைத்துக் கொள்ள முடியும். குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது உங்களுக்கு எச்சரிக்கை செய்தி காண்பிக்கப்படும்.

உலகளாவிய ரீதியில் 1 மில்லியனுக்கும் அதிகமான Android பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த செயலியை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
தொடர்புடைய இடுகை:


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top