ஆரம்பத்தில், "ஆங்கிலம் மட்டுமே இணையம்" என்றிருந்த நிலைமை இன்று முற்றாக மாறி எந்த ஒரு சாதனத்திலும் அவரவருக்கு தெரிந்த எந்த ஒரு மொழியையும் பயன்படுத்திக் கொள்ள இன்றைய இணையம் வழிவகுத்துள்ளது.

Swiftkey Keyboard தமிழ் மொழி

அந்தவகையில் கணினி உட்பட ஐபோன். ஐபேட்,  Android என எந்த ஒரு சாதனத்திலும் எமது இனிய மொழி "தமிழ் மொழியை"  மிக இலகுவாக இன்று பயன்படுத்திக் கொள்ள  முடிகிறது.தமிழ் மொழியை கணினியில் அல்லது உங்கள் Android சாதனத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.


தொடர்புடைய இடுகை:அதே போல் இன்று அதிகமானவர்கள் தமது ஸ்மார்ட் போன்களில் தரப்பட்டுள்ள Keyboard இற்கு பதிலாக பயன்படுத்தி வரும் மிகவும் பிரபலமான Swiftky Keyboard இலும் கூட தமிழ் மொழியை பயன்படுத்தும் வசதி உள்ளது என்பதை அதிகமானவர்கள் அறிந்ததில்லை.

Swiftkey Keyboard ஆனது அருமையான பல வசதிகளை தரக்கூடிய ஸ்மார்ட் சாதனங்களுக்கான Keyboard ஆகும்.


இதன் தோற்றத்தை எமது விருப்பத்திற்கு ஏற்றாட் போல் மாற்றி அமைக்க முடிவதுடன் நாம் ஏற்கனவே தட்டச்சு செய்தவைகளை மீண்டும் தட்டச்சு செய்யும் போது அதனை தானாகவே உணர்ந்து கொண்டு அந்த சொல்லை உடனடியாக பயன்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கக் கூடியது.

இந்த வசதியானது உங்கள் எண்ணங்களை அறியக்கூடிய ஒரு செயலி போன்ற ஒரு உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும்.

இதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் நீங்களும் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.

  • உங்கள் Android சாதனத்தில் இந்த செயலி இல்லை எனின் இதனை பின்வரும் இணைப்பு மூலம் தரவிறக்கி நிறுவிக் கொள்க.


Android அமைப்பு

  • பின் Settings ===> Control ===> Language and inputs எனும் பகுதிக்கு சென்று Swiftkey Keyboard என்பதை Tick செய்து அதற்கு நேரே இருக்கும் Settings குறியீட்டை சுட்டுக.
Swiftkey android அமைப்பு

  • பின்னர் தோன்றும் சாளரத்தில் Language என்பதை செடுக்கி அதில் தமிழ் மொழியை தெரிவு செய்து அதற்கான கோப்புக்களை தரவிறக்கிக் கொள்க.
swiftkey மொழி அமைப்புக்கள்


(இனி "தமிழ்" ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் Swiftkey ஊடாக பயன்படுத்த முடியும்.)

தமிழ் மொழி தெரிவு Android

  • பின்னர் Language எனும் அதே பகுதியில் Downloaded Languages என்பதற்குக் கீழ் இருக்கும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கும் Tick செய்து கொள்க.

  • பின் Settings ===> Control ===> Language and inputs எனும் பகுதிக்கு மீண்டும் வருக.

  • இனி குறிப்பிட்ட பகுதியில் தரப்பட்டுள்ள Keyboards and input methods என்பதற்குக் கீழ் இருக்கும் Default என்பதை சுட்டுக.
Swiftkey பொது

  • பின்னர் Multiple Languages (Swiftkey Keyboard) என்பதை சுட்டுக.

அவ்வளவுதான்.

இனி உங்கள் ஸ்மார்ட் போனில் எந்த ஒரு இடத்திலும் தமிழ் மொழியை தட்டச்சு செய்து கொள்ள முடியும்.நீங்கள் தமிழ் மொழியில் இருந்த ஆகிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் மாற்றிக் கொள்ள Space Bar ஐ தொடுவதன் மூலம் வலது புறமோ அல்லது இடது புறமோ நகரத்துக.தொடர்புடைய இடுகை: 


நீங்கள் iOS சாதனத்தை பயன்படுத்துபவராக இருந்தாலும் இந்த செயலியை Appstore இல் இருந்து தரவிறக்கி தமிழ் மொழியை பயன்படுத்திக் கொள்ளலாம்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top