பொதுவாக எமது Android சாதனங்களில் தரப்பட்டுள்ள Camara மூலமோ அல்லது மூன்றாம் நபர் செயலிகள் மூலமோ வீடியோ கோப்புக்களை பதிவு செய்வது எனின் குறிப்பிட்ட செயலியானது இயக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.


என்றாலும் hCamera எனும் Android சாதனத்துக்கான செயலி மூலம் குறிப்பிட்ட செயலி திறக்கப்பட்டிருக்காத நிலையிலும் எமது Android சாதனத்தின் Lock செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் வீடியோ கோப்புக்களை பதிவு செய்ய முடியும்.
இந்த வசதி மூலம் எம்மை அறியாமல் எமது ஸ்மார்ட் போனை வேவு பார்ப்பவர்களையும் குறிப்பிட ஒரு இடத்தில் எம்மை அறியாமல் இடம்பெறக்கூடிய அசாதாரண நிலைமைகளையும் அப்படியே வீடியோ கோப்புக்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த செயலியை இயக்கிவிட்ட பின் உங்கள் Andoid சாதனத்தின் மூலம் எந்த எந்த ஒரு செயற்பாட்டையும் தடை இன்றி மேற்கொள்ள முடியும்.


நீங்கள் அழைப்புக்களை மேற்கொண்டாலும் குருந்தகவல்களை (SMS) படித்தாலும், இணையத்தை உலா வந்தாலும் எவ்வித தடையும் இன்றி இந்த செயலியானது பின்புலத்தில் இருந்து தொடர்ச்சியாக வீடியோவை தொடர்ச்சியாக பதிவு செய்யும்.
இந்த செயலியின் மத்தியில் தரப்பட்டுள்ள பெரிய Button ஐ தொடர்ச்சியாக சிறிது நேரம் அழுத்தும் போது இந்த செயலி மூலம் வீடியோ பதிவு செய்யப்படும். பின் அதனை மீண்டும் சுட்டும் போது வீடியோ பதிவு செய்வது நிறுத்தப்படும்.

இதன் Setting பகுதியின் ஊடாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டிய அதி கூடிய நேரம், பதிவு செய்யப்படும் வீடியோ கோப்பின் தரம், அதன் அளவு போன்றவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்துகொள்ள முடியும்.

அது மாத்திரம் இன்றி இந்த செயலியின் முகப்புப் பக்கத்தின் மூலம் வீடியோவை பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட வேண்டிய Camera ஐயும் தெரிவு செய்ய முடியும் (Back Camera Or Front Camera)

நீங்களும் இந்த செயலியை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.


Download hCamera For Android


தொடர்புடைய இடுகை: ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறையும் புதியதொரு கடவுச் சொல்லை பயன்படுத்த உதவும் Android சாதனத்துக்கான செயலி

Love to hear what you think!

2 comments:

 
Top