இணைய ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் கூகுள் நிறுவனமானது அண்மையில் தொடர்ச்சியான சில மாற்றங்களை மேற்கொண்டு வந்தது.

கூகுளின் புதிய Logo


அந்த வகையில் ஆரம்பத்தில் கூகுள் என்ற நாமத்தின் கீழ் தனது படைப்புக்களை அறிமுகப்படுத்தி வந்த கூகுள் நிறுவனமானது அண்மையில் தனது அத்தனை படைப்புக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் நோக்கில் Alphabet எனும் தாய் கம்பனியை உருவாக்கி இருந்தமையானது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும்.இதனை தொடர்ந்து கூகுள் இன் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை என்பவர் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்க தற்பொழுது கூகுள் அதன் புத்தம் புது Logo ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.


கூகுள் நிறுவனம் துவக்கப்பட்டது தொடக்கம் இன்று வரை அதன் Logo இல் ஏற்படுத்தப்படும் ஆறாவது மாற்றமே இதுவாகும்.

ஆரம்பம் முதல் கூகுள் தனது Logo இற்கு பயன்படுத்தி வரும் அதே வர்ணத்தையே புதிய Logo இலும் பயன்படுத்தி உள்ளது. ஆனாலும் புதிய Logo இன் எழுத்துரு சற்று வேறுபட்டு அமைந்துள்ளது.


Google லோகோ 2015


மேலும் Google ஐ அடையாளப்படுத்துவதற்காக குறுகிய Logo ஆக பயன்படுத்தப்படும் அதன் முதல் ஆங்கில எழுத்தான G அதன் நீண்ட Logo இல் உள்ள அனைத்து வர்ணங்களும் உள்ளடக்கப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


கீழே படத்தில் இருப்பது 1998 ஆம் ஆண்டு கூகுள் பயன்படுத்திய Logo ஆகும்.

Google 1998

இது 1998 - 1999 வரையான காலப்பகுதியில் கூகுள் பயன்படுத்தி வந்த Logo ஆகும்.

Google 1998-1999


கீழே படத்தில் இருப்பது கூகுளால் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த logo ஆகும். பத்து வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த இது 1999 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது.

Google 1999 - 2010


கீழிருக்கும் Logo ஆனது  2010 தொடக்கம் 2013 வரை பயன்படுத்தப்பட்டது.

Google 2010


இதுவே இறுதியாக பயன்படுத்தப்பட்ட Logo ஆகும். இது 2013 தொடக்கம் 2015 வரை பயன்படுத்தப்பட்டு வந்தது.
பின்வரும் Logo ஆனது கூகுளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய Logo ஆகும். இதன் பிறகு கூகுளின் சேவைகளில் இதனை பார்க்க முடியும்.


புதிய Logo ஐ உலகுக்கு அறிமுகபடுத்தும் வகையில் கூகுளின் முகப்புப்பக்கத்தில் தோன்றும் Doodle இல் புதிய Logo ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
Image Credit: wikipedia, fastcodesign

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top