கூகுள் குரோம் இணைய உலாவியானது (Web Browser) உலகளாவிய ரீதியில் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிக வேகமாக இயங்கக் கூடிய ஒரு இணைய உலாவியாகும்.

கூகுள் குரோம் இணைய உலாவி நிலைகுலைதல்


இந்த இணைய உலாவியை கணினிகளில் பயன்படுத்த முடியுமான அதேவேளை ஸ்மார்ட் சாதனங்களிலும் நிறுவி பயன்படுத்த முடியும்.இந்த இணைய உலாவியில் நாம் அறியாத ஏராளமான வசதிகள் தரப்பட்டுள்ளன இவற்றை எமது முன்னைய பதிவுகள் மூலம் நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.


தொடர்புடைய இடுகை:


என்றாலும் இதன் மறுபக்கம் ஒரு குறைபாடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது வெறும் 16 எழுத்துக்களில் அமைந்த ஒரு நிரலை உங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியின் Address Bar இல் தட்டச்சு செய்தால் போதும் உங்கள் இணைய உலாவி அடுத்த கணமே நிலைகுலைந்து விடும்.


இந்த குறைபாடானது கணினிகளுக்கான அனைத்து கூகுள் குரோம் இணைய உலாவிகளின் பதிப்புக்களிலும் ஏற்படுகின்றது.


நீங்களும் இதனை சோதித்துப் பார்க்க விரும்பினால் பின்வரும் நிரல்களை உங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியில் தட்டச்சு செய்து பாருங்கள்.

http://x/%%30%30

மேற்குறிப்பட்ட வரிகளை தட்டச்சு செய்து Enter அழுத்திய மறுகணமே உங்கள் கூகுள் குரோம் இணைய உலாவி உறைந்து திரும்ப திறக்கப்படுவதை அவதானிக்கலாம்.

இனி வரும் பதிப்புக்களில் இந்த குறைபாடு சரி செய்யப்படலாம்.அது வரை இந்த நிரல் மூலம் கூகுள் குரோம் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்தலாம்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top