சிறந்த வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்துவதில் Huawei நிறுவனமும் சளைத்ததல்ல. 

அந்த வகையில் பேர்லின் நகரில் இடம்பெற்ற IFA நிகழ்வில் Huawei நிறுவனமும் தனது தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்தி இருந்தது.


hUAWEI G8 smart phone

அவற்றுள் Huawei G8 எனும் ஸ்மார்ட் சாதனமும் சிறந்த வசதிகளை கொண்டுள்ளது. 


இந்த சாதனமானது Fingerprint Sensor ஐ பின் புறத்தில் கொண்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும். இதன் மூலம் குறிப்பிட்ட ஸ்மார்ட் சாதனத்தை Unlock செய்யவும், உள்வரும் அழைப்புக்களை ஏற்கவும், அலாரத்தை கட்டுப்படுத்தவும் முடியும்.

ஹுவாயி போன்உலேகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள வெளிப்புறத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் சாதனமானது  5.5 அங்குல FHD திரையுடன் Snapdragon 615 Processor மற்றும் 3GB RAM போன்றவற்றை கொண்டுள்ளது.

மேலும் இதன் பிரதான கேமரா 13 Megapixel தெளிவுத் திறனை கொண்டுள்ளதுடன் முன்பக்க கேமரா 5 Megapixel தெளிவுத்திறனை கொண்டதாக அமைந்துள்ளது.

இவற்றுடன் நீண்ட நேரம் மின் சக்தியை சேமிக்கும் வகையில் 3000mAh வலுவுடைய Battery மற்றும் 32GB உள்ளக நினைவகம் போன்றவற்றினையும் கொண்டுள்ள இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.தொடர்புடைய இடுகை: 23 Megapixel கேமராவுடன் சோனி அறிமுகப்படுத்தும் Sony Xperia Z5 உட்பட இன்னும் இரண்டு ஸ்மார்ட் போன்கள் 

மூலம்: ஹுவாயி 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top