இன்று அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட் சாதனங்களானது அருமையான பல வசதிகளை கொண்டிருப்பதால் அவற்றினை நாம் எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி விடுகிறோம் அல்லவா?


Android Phone ஐ பாதுகாப்பது எப்படி


இருப்பினும் அவற்றினை எமது கவனக் குறைபாட்டால் தொலைத்து விடுவதுண்டு. சில சந்தர்பங்களில் அவைகள் திருடர்களின் கைகளில் சிக்கி விடுவதும் உண்டு.


இது போன்ற சந்தர்பங்களில் குறிப்பிட்ட சாதனம் தொலைந்து போனது ஒரு புறம் இருக்க அதில் உள்ள விலைமதிப்பற்ற எமது தகவல்களை ஏனையவர்கள் தவறாக பயன்படுத்தி விடுவார்களோ என்ற அச்சமும் இருக்கவே செய்யும்.

இன்றைய ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் இணையத்தை மிக இலகுவாக பயன்படுத்தவும் இணையத்தின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளவும் முடிவதால் எமது நிதியியல் தொடர்பான தகவல்களிலும் திருடர்கள் கை வைக்க இடமுண்டு.


தொடர்புடைய இடுகை:

எனவே இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தும் மீள்வதற்கு என எமது Android சாதனங்களில் Device Manager எனும் வசதி தரப்பட்டுள்ளது.


இந்த வசதி மூலம் இன்னுமொரு சாதனத்தை பயன்படுத்தி தொலைந்து போன எமது Android சாதனம் இருக்கக் கூடிய இடத்தை கூகுள் வரைபடம் (கூகுள் மேப்) மூலம் அறிந்து கொள்ள முடிவதுடன் அதை Lock செய்யவும், அதில் உள்ள தரவுகளை நீக்கிக் கொள்ளவும் முடியும்.

இதற்கு உங்கள் Android சாதனத்தில் இருக்கக்கூடிய Device Manager வசதி செயற்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்பதுடன் உங்கள் Android சாதனம் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க வேண்டும் எனின் Location வசதியும் செயற்படுத்தப்பட்ட நிலையில் இருத்தல் அவசியம்.


Device manager செயற்படுத்தல்


இவற்றை செயற்படுத்திக் கொள்வதற்கு உங்கள் Android சாதனத்தில் Settings ==> General ===> Security படுதியில் தரப்பட்டுள்ள Device Administrator என்பதை சுட்டும் போது தோன்றும் பகுதியில் Device Manager என்பதை Tick செய்து கொள்க.


Android இல் location வசதியை செயற்படுத்தல்


மேலும் Settings பகுதியில் தரப்பட்டுள்ள Connections எனும் பிரிவின் ஊடாக Location வசதியை செயற்படுத்திக் கொள்ள முடியும்.

இவைகள் செயற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் உங்கள் Android சாதனம் தொலைந்திருந்தால் Android Device manager மூலம் உங்கள் Android சாதனத்தை பூரணமாக கட்டுப்படுத்த முடியும்.


இந்நிலையில் உங்கள் Android சாதனம் தொலைந்திருந்தால் இன்னும் ஒரு Android சாதனத்தை பயன்படுத்தியோ அல்லது கணினியின் மூலமோ https://www.google.com/android/devicemanager எனும் இணையப்பக்கத்திற்கு சென்று உங்கள் கூகுள் கணக்கிற்கான Username மற்றும் Password போன்றவற்றினை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்ள வேண்டும்.

அல்லது கூகுள் தேடியந்திரத்தில் Find My Phone என தட்டச்சு செய்து தேடுவதன் மூலமும் கூகுளின் முகப்புப் பக்கத்தில் இருந்தவாரே பின்வரும் வசதியை செயற்படுத்தலாம்.

குறிப்பு: நீங்கள் உள்ளிடும் கூகுள் கணக்கானது தொலைந்துபோன உங்கள் Android சாதனத்தில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த கூகுள் கணக்காக இருத்தல் வேண்டும்.


இனி பெறப்படும் சாளரத்தில் உங்கள் Android சாதனத்தின் பெயர்/வகை, உங்கள் Android சாதனம் இறுதியாக இணையத்துடன் தொடர்பு படுத்தப்பட்ட நாள், உங்கள் Android சாதனம் இறுதியாக இணையத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இடம் அல்லது தற்போது உங்கள் Android சாதனம் இருக்கக்கூடிய இடம் போன்ற தகவல்கள் காண்பிக்கப்படும். 

இவற்றுடன் Ring, Lock, Erase போன்ற வசதிகள் தரப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதுடன் மேலும் இவைகள் தரப்பட்டிருக்கும் சாளரத்தின் வலது மேல் மூலையில் சிறியதொரு GPS குறியீடும் தரப்பட்டிருக்கும்.


கூகுள் வரைபடம் ஊடாக தொலைந்த மொபைல் ஐ கண்டுபிடித்தல்


இதில் தரப்பட்டிருக்கும் GPS குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்கள் Android சாதனம் இருக்கும் அமைவிடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

Ring என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் ஒரு ஒலியை (சத்தம்) எழுப்ப முடியும். இதன் போது உங்கள் Android சாதனம் Silent நிலையில் இருந்தாலும் கூட ஒலி எழுப்பப்படும்.


தொலைந்த Android ஸ்மார்ட் போனை Lock செய்தல்


மேலும் Lock என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் ஒரு செய்தியையும் நீங்கள் பயன்படுத்தும் இன்னும் ஒரு தொலைபேசி இலக்கத்தையும் Lock Screen இல் தோன்றும் வகையில் நீங்கள் விரும்பும் கடவுச்சொல்லை பயன்படுத்தி Lock செய்து கொள்ள முடியும். இதன் போது குறிப்பிட்ட செய்தி தொலைந்து போன உங்கள் Android சாதனத்தில் தோன்றுவதுடன் நீங்கள் உள்ளிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தும் வகையில் Call செய்வதற்கான Buttom உம் தோன்றும். (மேலே படத்தில் உள்ளவாறு)அதே போல் Erase என்பதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் இருக்கக்கூடிய தகவல்களை நீக்கிக் கொள்ள முடியும். இது உங்கள் இறுதிக்கட்ட முடிவாக இருத்தல் வேண்டும் ஏனெனில் சில சந்தர்பங்களில் எமது பொருட்களை நம் அருகே வைத்து விட்டு அதனை நாம் தேடும் சந்தர்பங்களே ஏராளம். எனவே Erase செய்வதற்கு முன் Ring செய்வதன் மூலமே அதனை கண்டறியக் கூடியதாக இருக்கும்.


குறிப்பு: 
  • இதன் போது Memory Card இல் இருக்கக்கூடிய தகவல்கள் நீக்கப்படமாட்டாது.
  • மேற்கூறிய செயற்பாடுகளை நீங்கள் செய்யும் போது உங்கள் Android சாதனம் இணையத்துடன் தொடர்புபடுத்தப்படாத நிலையில் இருந்திருந்தால் குறிப்பிட்ட சாதனம் இணையத்துடன் தொடர்பு படுத்தப்பட்ட பின் மேற்கூறிய வகையில் நீங்கள் செய்த செயற்பாடுகள் செயற்படுத்தப்படும்.எனினும் வெள்ளம் வரும்முன் அணைகட்ட வேண்டும் என்பதற்கு இணங்க எமது Android சாதனம் தொலையும் முன் அதனை பாதுகாப்பதே சிறந்தது.

இதற்கு Android Alarm System எனும் செயலி உங்களுக்கு உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
image credit: gizbot

Love to hear what you think!

2 comments:

 
Top