இன்றைய உலகை பின்னிப் பிணைந்ததாக இணைத்து ஒரு கிராமம் போல் அமைத்துள்ள இணையமானது ஒவ்வொரு தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் என ஏராளமான பயன்களை தரக்கூடியதாக அமைந்துள்ளது.


இணைய தளங்களின் வரலாறுகள்.


அந்த வகையில் ஒவ்வொரு தனி நபர்களதும், நிறுவனங்களதும் வெவ்வேறு பட்ட தேவை விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் வெவ்வேறு தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இணைய தளங்கள் இன்று உருவாக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.அந்த வகையில் இன்று இணையத்தில் முத்திரை பதித்திருக்கும் ஒவ்வொரு இணையதளங்களும்  அதன் ஆரம்பம் தொட்டு இன்று வரையான வரலாறுகள் உண்டு.


உதாரணத்திற்கு நாம் பேஸ்புக் தளத்தை எடுத்துக் கொண்டால் அதன் ஆரம்பமானது மிகவும் சாதரனமானதாகவே அமைந்திருந்தது இருப்பினும் அதில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களானது அதை படிப்படியாக வளர்ச்சி அடைய செய்து இன்று அதனை உலகின் "நம்பர் வன்" என்று சொல்லும் அளவுக்கு அது இணைய உலகை தன்பக்கம் ஈர்த்து வைத்துள்ளது.அவ்வாறு இன்றைய உலகில் தடம் பதித்து இருக்கக்கூடிய பேஸ்புக், ட்ரொப்பொக்ஸ், ஈபே, கூகுள் பிளஸ், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப், விக்கிபீடியா போன்ற ஒவ்வொரு இணையதளங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இன்று வரை எவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை மிக இலகுவாக அறிந்துகொள்ள உதவுகிறது Sartlin எனும் இணையதளம்.

ஆசிரியர், மாணவர்கள், தொழிநுட்ப விரும்பிகள் என அனைத்து தரப்பினராலும் மிக இலகுவாக அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு இணையதளத்திலும் வெவ்வேறான கால கட்டங்களில் எவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றன என்பதை இரத்தின சுருக்கமாக எடுத்து தருகின்றது இந்த இணையதளம்.


நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top