ஆரம்பத்தில் ஐபோன் சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட Toucher வசதியானது ஐபோன் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை Home Button இற்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ள முடிவதுடன் இன்னும் பல வசதிகளையும் இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.


EasyTouch செயலி Android


இருப்பினும் இந்த வசதி Android இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும் இந்த வசதியை தரக்கூடிய மூன்றாம் நபர் செயலிகளை எமது Android சாதனங்களில் நிறுவுவதன் மூலம் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.இதற்கென ஏராளமான செயலிகள் Play Store இல் இருந்தாலும் EasyTouch எனும் செயலியானது ஐ-போனில் தரப்பட்டிருக்கக்கூடிய அதே தோற்றத்தை தருவதுடன் மேலும் பல அருமையான வசதிகளையும் இது தருகிறது.


இதில் தரப்பட்டுள்ள Tocher இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் பல்வேறு தோற்றங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


மேலும் இதனை சுட்டும் போது விரியும் சிறிய இடைமுகத்தின் மூலம் பின்வரும் வசதிகளை பெற முடியும்.


Toucher செயலி Android

Favor: அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளை மிக இலகுவாக திறந்துகொள்ள முடியும்.

இதில் தரப்பட்டுள்ள Favor எனும் பகுதியில் நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய செயலிகளை இணைத்துக்கொள்ள முடியும். எனவே Toucher மூலமாகவே அவற்றினை மிக விரைவாக திறந்து கொள்ள முடியும்.


Phone: தொடர்பாடலுக்கான வசதிகளை இலகுவாக பெற முடியும்.

இதனை சுட்டுவதன் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கான வசதி, அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான Dial Pad நீங்கள் அண்மையில் அழைப்புக்களை ஏற்படுத்திய இலக்கங்கள் மற்றும் Android சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றை கையாள முடியும்.


Home Button + Back Button

உங்கள் Android சாதனத்தில் தரப்பட்டுள்ள Home Button மற்றும் Back Button இற்கு பதிலாக இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். Android சாதனத்தில் உள்ள Home Button + Back Button கள் முறையாக இயங்காத சந்தர்பத்தில் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையக்கூடும்.
\
குறிப்பு: இந்த செயலியின் ஊடாக Back Button ஐ பயன்படுத்துவதற்கு  Settings ===> Device ===> Accessibility என்பதில் Service என்பதற்குக் கீழ் தரப்பட்டுள்ள EasyTouch என்பதன் செயற்பாட்டை இயக்க வேண்டும். (On)


Lock Screen: Android சாதனத்தின் திரையை Lock செய்ய முடியும்.

இதில் தப்பட்டுள்ள Lock Screen என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தின் திரையை Lock செய்துகொள்ள முடியும். குறிப்பிட்ட செயலியின் மூலம் Screen Lock செய்வதற்கு Settings ===> General ===> Security ===> Device Administrators எனும் பகுதியில் தரப்பட்டுள்ள EasyTouch என்பதை Tick செய்ய வேண்டும்.


Clean Memory: "Battery இன் சக்தியை நீண்ட நேரத்திற்கு சேமிக்க முடியும்."

இந்த செயலியில் தரப்பட்டுள்ள Clean Memory என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் இயங்கக்கூடிய செயலிகளின் செயற்பாட்டை முடக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் Android சாதனத்திலுள்ள Battery இன் சக்தி நீண்ட நேரத்திற்கு சேமிக்கப் படுவதுடன் குறிப்பிட்ட சாதனம் வேகமாக இயங்குவதற்கும் வழிவகுக்கப்படும்.


தொடர்புடைய இடுகை:


Photograph: வீடியோ மற்றும் புகைப்படங்கள் தொடர்பான வசதிகளை நிர்வகிக்க முடியும்.

இதில் உள்ள Photograph என்பதை சுட்டுவதன் மூலம் Gallery ஐ திறந்துகொள்ளவும், புகைப்படங்கள் மற்றும் Selfie புகைப்படங்களை எடுக்கவும், வீடியோ கோப்புக்களை பதிவு செய்யவும் முடியும்.


Notification: உங்கள் Android சாதனத்தில் தோன்றும் Notification களை கண்காணிக்க முடியும்.

இந்த செயலியில் தரப்பட்டுள்ள Notification என்பதை சுட்டுவதன் ஊடாக உங்கள் Android சாதனத்தின் Notification Panel ஐ திறந்து கொள்ள முடியும். இதன் மூலம் Notification களை கண்காணிக்கலாம்.


தொடர்புடைய இடுகை:
செயலிகளை தேடிப்பெறும் வசதி


அது மாத்திரம் இன்றி EasyToch ஐ சுட்டும் போது தோன்றும் சிறிய சாளரத்தின் மத்தியில் சுட்டுவதன் ஊடாக அதன் அடுத்த பகுதி தோன்றும். இந்த பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள எந்த ஒரு செயலியையும் மிக விரைவாக தேடிப்பெருவதற்கான Search வசதி தரப்பட்டுள்ளதுடன், Settings பகுதியில் இருக்கக்கூடிய பல்வேறு வசதிகளை இயக்கிக் கொள்ளவும் முடக்கிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது.


EasyTouch Android


இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை இந்த செயலியின் Settings பகுதில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் பெற முடியும். 

உலகளாவிய ரீதியில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த செயலியை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top