விண்டோஸ் கணினியானது ஏராளமான வசதிகளை தன்னகமாக கொண்டுள்ளது. எனினும் அதில் இருக்கும் பல வசதிகளை நாம் இது வரை அறிந்ததில்லை.

விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் சாளரம்


அதுபோன்ற நாம் அறிந்திராத ஏராளமான பல வசதிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போன்று நீங்கள் விரும்பக்கூடிய ஒரு வடிவத்தில் அமைந்த எந்த கோப்பு ஒன்றையும் ஒரு சில நொடிப் பொழுதுகளில் எமது விண்டோஸ் கணினியில் உருவாக்கிக் கொள்ள முடியும்.


உதாரணத்திற்கு 1 GB அளவுடைய PDF கோப்பு ஒன்றை, 10 GB அளவு உடைய Mp4 வீடியோ கோப்பு ஒன்றை அல்லது 20 GB உடைய மைக்ரோசாப்ட் ஆவணம் ஒன்றை என நீங்கள் விரும்பும் எந்த ஒரு வடிவத்திலும் எந்த ஒரு அளவிலும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

நீங்களும் இதனை உங்கள் விண்டோஸ் கணினியில் முயற்சித்துப் பார்க்க விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.


 • உங்கள் கணினியில் தரப்பட்டுள்ள Search Bar மூலம் Command Prompt ஐ தேடிப்பெருக.
விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு


 • பின் அதனை Right Click செய்து Run as Administrator என்பதை சுட்டுக.
விண்டோஸ் கொமான்ட் ப்ரோம்ப்ட்


 • இனி தோன்றும் Command Prompt சாளரத்தில் பின்வரும் நிரல்களை தட்டச்சு செய்து Enter அலுத்துக.


 fsutil file createnew D:Tamilinfotech.mp4 500000000

விண்டோஸ் ப்ரோபெர்தீஸ்

இனி உங்கள் வன்தட்டின் D பாகத்தில் 500000000 அளவுடைய Tamilinfotech எனும் ஒரு Mp4 கோப்பு உருவாக்கப்படும்.

 • மேலே தரப்பட்டுள்ள நிரலில் உள்ள D என்பது கணினியில் சேமிக்கப்பட வேண்டிய இடத்தை (வன்தட்டின் பாகம்) குறிக்கின்றது. 
 • 500000000 என்பது உருவாக்கப்படும் கோப்புடைய அளவை குறிக்கின்றது.
 • Tamilinfotech என்பது உருவாக்கப்படும் கோப்பின் பெயரை குறிக்கின்றது.
 • Mp4 என்பதற்கு பதிலாக .pdf, .txt, .png, .doc என எந்த ஒரு கோப்பிற்கான வடிவத்தையும் பயன்படுத்தலாம்.

இவற்றை உங்களுக்கு ஏற்றார் போல் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

இதன் பயன்பாடுகள் என்ன?

 • இவ்வாறு உருவாக்கப்படும் கோப்புக்கள் வெறும் போலியானவைகளே.
 • ஒரு சில நொடிப் பொழுதுகளில் எத்தனை டெரா பைட் அளவுடைய நினைவகங்களையும் நிரப்புவதற்கு இந்த முறை பயன்படும்.
 • இதன் மூலம் உங்கள் நண்பர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
 • விண்டோஸ் கணினியில் இப்படியும் ஒரு வசதி உள்ளது என்பதற்கான அறிவை உங்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

தொடர்புடைய இடுகைகள்:Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top