ஓய்வு என்பது ஒவ்வொரு தனி நபர்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். வேகமாக இயங்கக்கூடிய இன்றைய உலகிலே பலரும் பல்வேறு காரணங்களுக்காக களைத்து விடுவதுண்டு.
இது போன்ற சந்தர்பங்களில் இயற்கையின் அருட்கொடைகளான கடற்கரையோரத்தில் அலைகளால் ஏற்படுத்தப்படும் ஒலி, அமைதியான இரவு நேரத்தில் ஏற்படுத்தப்படும் ஒலி, ஒரு நீரோட்டத்தின் ஓசை, எழில் கொஞ்சும் காலை நேர காட்சிகள் போன்றன எமது மனதில் இருக்கக்கூடிய கஷ்ட துன்பங்களை மறந்து ஒரு ஆறுதலை பெற்றுக்கொள்ள உதவுகின்றன.

அவ்வாறான தருணங்களில் எம்மால் இயற்கையின் எழில் கொஞ்சும் இடங்களை நாடி செல்ல முடியாவிட்டாலும் எமது கையில் இருக்கக்கூடிய Android சாதனத்தின் மூலம் அவ்வாறான அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Android சாதனத்துக்கான Lusity எனும் செயலியானது எமது மனதுக்கு இதமான ஒலிகளை மெய்நிகராக கேட்டு மகிழ உதவுகிறது.
இந்த செயலியின் மூலம் பின்வரும் ஓசைகளை கேட்க முடியும்.

 • ஒரு திறந்த புள்வெளிக்கு அருகே இருக்கும் போது கேட்கக் கூடிய ஓசை.
 • ஒரு அமைதியான இரவுப் பொழுதில் எழக்கூடிய இயற்கையின் ஓசை.
 • சோ... என மழை பொழியும் போது நாம் ஒரு மரத்தடியில் நின்றால் நாம் கேட்கக்கூடிய  ஓசை.
 • கடற்கரை ஓரத்தில் எழும்பக்கூடிய அலையின் ஓசை.
 • வேகமாக பனி கொட்டும் போது எழும்மபக் கூடிய ஓசை.
 • ஒரு நீரோடையில் நீர் ஓடும் போது எழும்பும் அழகிய ஒலி.
 • ஒரு நீர் வீழ்ச்சியின் அருகே நாம் இருக்கும் போது கேட்கக்கூடிய ஒலி.
 • ஆழ்கடல் கேட்கக்கூடிய ஒலி.
 • நெருப்பு எரியும் போது கேட்கும் ஒலி.தொடர்புடைய இடுகை: தொந்தரவு இன்றி நிம்மதியாக தூங்க வழிவகுக்கும் Android சாதனத்துக்கான செயலி.

 • எழில் கொஞ்சும் காலைப் பொழுதில் எழும்பக்கூடிய அழகிய ஓசை.
 • வேகமான காற்றின் காரணமாக பாலைவனத்தில் எழும்பக்கூடிய ஓசை.
 • மாலை நேரத்தில் ஒரு வனத்தில் ஏற்படுத்தப்படும் ஒலி.
 • ஒரு நீர் தேக்கத்தில் தவளைகளால் ஏற்படுத்தப்படும் ஒலி.


இது போன்ற பல அழகிய தருணங்களை மெய் நிகராக அடைந்து கொள்ள உதவுகிறது இந்த செயலி.

அது மாத்திரம் இன்றி மேற்கூறப்பட்ட ஒவ்வொரு சந்தர்பத்திலும் எழும்பக்கூடிய ஓசைகளை எமது விருப்பத்திற்கு ஏற்றாட் போல் மாற்றி அமைக்கக் கூடிய வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு ஒரு காலை பொழுதில் ஏற்படக்கூடிய ஒளியில் நீங்கள் விரும்பினால் சேவல் கூவும் ஒலியையும் சேர்க்க முடியும் அதை நீங்கள் விரும்பா விட்டால் தவிர்க்க முடியும். மேலும் அதன் சுருதியை கூட்டி குறைப்பதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

அதே போல் ஒரு காலை பொழுதில் எழுப்பப்படக் கூடிய மணி ஓசை, ஒரு காலைப்பொழுதில் நாய் குறைக்கக்கூடிய ஓசை, காலைப் பொழுதில் காகம் கரையும் ஓசை, ஒரு காலைப் பொழுதில் தேனீக்கள் பூக்களை வட்டம் இடும் ஓசை என நீங்கள் கேட்க விரும்பும் காலைப் பொழுதின் ஓசையை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் அமைத்துக்கொள்ள முடியும்.

இது போல் மேலே தரப்பட்டுள்ள ஒவ்வொரு சந்தர்பத்திலும் இணைப்பதற்கும் தவிர்பதற்கும் என அந்தந்த சந்தர்பங்களுக்கு ஏற்றவாறான ஒலிகள் தரப்பட்டுள்ளன.

எனவே உங்களுக்கான அழகிய தருணங்களை இந்த செயலி ஏற்படுத்தித் தரும் என்பதில் ஐயமில்லை.

நீங்களும் இந்த பயனுள்ள செயலியை உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download Lusity Relaxing Sounds For Android


தொடர்புடைய இடுகை: கணினி முன் அமர்ந்து களைத்து விட்டீர்களா? மனதுக்கு இதமான ஓசைகளை தந்து புத்துணர்ச்சி ஊட்டுகிறது ஒரு தளம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top