Android இயங்குதளமானது பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி பயன்படுத்த பயனர்களுக்கு அனுமதிக்கின்றது.

Color Status Bar Android


அந்தவகையில் உங்கள் Android ஸ்மார்ட் போனின் Status Bar ஐ பல்வேறு வர்ணங்களுக்கு மாற்றிக் கொள்ள உதவுகின்றது Color Status Bar எனும் Android சாதனங்களுக்கான செயலி.


இதன் மூலம் Status Bar இன் நிறங்களை பல்வேறு வர்ணங்களுக்கு மாற்றிக்கொள்ள முடிவது மட்டுமல்லாது Notification Panel இற்கு அழகிய பின்புலப்படங்களையும் இட்டுக்கொள்ள முடிகிறது.



Color Status Bar Android அப்ளிகேஷன்


மேலும் இந்த செயலியில் தரப்பட்டுள்ள வர்ணங்கள். மற்றும் பின்புலப்படங்களில் அமைந்த தோற்றங்களை (Theme) மாத்திரம் அல்லாது எமது விருப்பத்திற்கு ஏற்ப வர்ணங்களையும் பின்புலப்படங்களையும் இட்டு பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது.


தொடர்புடைய இடுகை:


எனவே உங்களுக்கு அதிகம் பிடித்த வர்ணங்களை Notification Panel இற்கு இட்டுக்கொள்ள முடிவதுடன் உங்கள் புகைப்படங்களையோ அல்லது நீங்கள் விரும்பக்கூடிய ஏனையவர்களின் புகைப்படங்களையோ Notification Panel இற்கு இட்டுக் கொள்ள முடியும்.

Color Status Bar வர்ணம் மாற்றுதல்


இவைகள் தவிர அதில் தோன்றும் எழுத்துக்களின் வர்ணங்களையும் Status Bar இல் தோன்றம் குறியீடுகளின் வர்ணங்களையும் கூட உங்கள் விருப்பம் போல் அமைக்க முடியும்.

இவைகள் தவிர Status Bar இன் வலது மூலையில் தோன்றும் நேரத்தை Status Bar இன் மத்தியப் பகுதியில் தோன்றச் செய்ய முடிவதுடன் Notification Panel இல் தோன்றக்கூடிய WiFi, Bluetooth, GPS, Airplane Mode போன்றவற்றுக்கான Quick Settings பகுதியை மறைத்துக் கொள்ளவும் முடியும்.


நீங்கள் இந்த செயலியை செயற்படுத்திக் கொள்வதற்கு இந்த செயலியில் தரப்பட்டுள்ள Enable Color Status Bar என்பதை Tick செய்யத பின் தோன்றும் Notification Access என்பதில் Color Status Bar என்பதை Tick செய்வதன் மூலம் இந்த செயலியை செயற்படுத்திக் கொள்ளலாம்.

நீங்களும் இந்த செயலியை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top