Apple நிறுவனம் தனது iPad சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது.


iPad Pro என அழைக்கப்படும் இது 2732 x 2048 Pixels Resolution இல் அமைந்த 12.9 அங்குல திரையை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Apple iPad சாதனம்


இது A9X எனும் வகையில் அமைந்த Processor கொண்டுள்ளது இந்த Processor ஆனது முன்னைய பதிப்புக்களில் அறிமுகப்படுத்தப்பட்ட A8X processor ஐ விட 1.8 மடங்கு வேகமாக இயங்கக்கூடியதாகும்.




Face detection, BSI Sensor வசதிகளுடன் இதன் முன்பக்க கேமரா வடிவமைக்கப் பட்டுள்ளதுடன் இதன் பிரதான கேமராவானது 8மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்டுள்ளது.

மேலும் இந்த சாதனமானது இருவேறு பதிப்புக்களாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது அதில் ஒன்று WiFi வலையமைப்பில் மாத்திரம் இயங்கக்கூடியதாகும். மற்றையது WiFi வலையமைப்புடன் சாதாரண மொபைல் வலையமைப்புக்களுக்கும் ஆதரவு அளிக்கக் கூடியதாகும். மேலும் இது Touch ID  மற்றும் Fingerprint sensor வசதிகளையும் கொண்டுள்ளது.

இதில் Wifi வலையமைப்புக்கு மாத்திரம் ஆதரவு அளிக்கக்கூடிய பதிப்பானது 32GB மற்றும் 128GB ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டுள்ளதுடன் மற்றைய பதிப்பானது 128GB நினைவகத்தை மாத்திரம் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.


Stylus எனப்படும் இலத்திரனியல் பென்சிலும்


மேலும் இந்த சாதனத்துடன் Stylus எனப்படும் இலத்திரனியல் பென்சிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 100 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மேலும் இது வெள்ளி, சாம்பல், மற்றும் பொன் நிறங்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதன் விலையானது 799 அமெரிக்க டொலர்கள் தொடக்கம் ஆரம்பிக்கிறது.


Wifi வலையமைப்புக்கு மாத்திரம் ஆதரவு அளிக்கும் 32GB பதிப்பானது 799 அமெரிக்க டொலர்களாகும், இதன் 128 GB பதிப்பானது 949 அமெரிக்க டொலர்களாகும். அதேவேலை WiFi வலையமைப்புடன் சாதாரண மொபைல் வலையமைப்புக்களுக்கும் ஆதரவு அளிக்கக் கூடிய 128GB பதிப்பானது 1,079 அமெரிக்க டொலர்களாகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய இடுகை: 3D Touch வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன் 6-எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் ஸ்மார்ட் போன்கள்.


Sources: AppleVenturebeat

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top