டோஷிபா நிறுவனம் அனைத்து வசதிகளுடனும் கூடிய All In One எனும் கணினியை அறிமுகப்படுத்தி உள்ளது.டோஷிபா All in one கணினி


விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த கணினியானது Dynabook D81/T என அழைக்கப்படுகிறது.


1920 x 1080 Pixel Resolution இல் அமைந்த 21.5 அங்குல தொடுதிரையுடன்  2.50GHz வேகத்தில் இயங்கக்கூடிய Intel Core i7 Processor ஐயும் இது கொண்டுள்ளது.

மேலும்  DDR3 8GB RAM மற்றும் 3TB ஹார்ட் டிரைவ் போன்றவற்றுடன் SD card slot, USB 3.0 ports, HDMI input, HDMI output மற்றும் WiFi, Bluetooth 4.0 போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது.

பயனர்களின் தேவைக்கு ஏற்ப மைக்ரோசாப்டின் 64-Bit இல் அமைந்த விண்டோஸ் 10 ஹோம், விண்டோஸ் 10 பிஸ்னஸ், விண்டோஸ் 10 பிரீமியம் போன்ற பதிப்புக்கள் நிறுவப்பட்டதாக இது வெளியிடப்படுகிறது.

எதிர்வரும் 8 ஆம் திகதி (18/9/2015) விற்பனைக்கு விடப்படவுள்ள இதன் விலை 1,969 அமெரிக்க டொலர்கள் ஆகும்.


மூலம்: Dynabook

Love to hear what you think!

1 comments:

 
Top