ஸ்மார்ட் போன்களை தயாரித்து சந்தைபடுத்தும் Blu நிறுவனம் தனது Pure XL எனும் புதியதொரு பேப்லெட் (Phablet) சாதனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Pure XL பேப்லட்


6 அங்குல திரையை கொண்டுள்ள இது பின்புறத்தில் Fingerprint Sensor ஐயும் 24 Megapixel கேமராவையும் கொண்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.

கூகுளின் Android 5.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது 2.0 GHz வேகத்தில் இயங்கக்கூடிய 64-bit Octa-core Mediatek MT6795 Helio x10 Processor ஐ கொண்டுள்ளது.


மேலும் 3 GB Ram மற்றும் 64 GB வரை நினைவகத்தை அதிகரிக்கக் கூடிய வகையில் microSD Card Slot வசதியுடன் 64 GB உள்ளக நினைவகத்தையும் இது கொண்டுள்ளது.

Pure XL android 5.1


24 Megapixel பிரதான கேமராவை கொண்டுள்ள இதன் முன்பக்க கேமராவானது 8 Megapixel தொளிவுத்திறன் கொண்டதாகும்.

அத்துடன் வேகமாக மின்னேற்றிக் கொள்ளக் கூடிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் Battery 3,500 mAh வலுவை கொண்டது.

Pure XL வர்ணம்


இவைகள் தவிர 4G LTE, Wi-Fi, Bluetooth 4.0, NFC போன்ற வசதிகளை கொண்டுள்ள இது எதிர்வரும் 29 ஆம் திகதி விற்பனைக்கு விடப்பட உள்ளது.


சாம்பல், மற்றும் பொன் (Gray, Gold) நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் விலை 350 அமெரிக்க டொலர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Sources: bluproducts

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top