சிறந்த தொழில்நுட்ப சாதனங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் Lenovo நிறுவனம் Lenovo Vibe Shot எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது.

Lenovo Vibe Shot

ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்தி சிறந்த புகைப்படங்களை எடுக்க நினைப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட் போன் சிறந்த தெரிவாக அமையும் என்பதில் ஐயமில்லை.


இது 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ள அதேவேளை 16 மெகாபிக்சல் தெளிவுத்திறனை கொண்ட பிரதான கேமராவை கொண்டுள்ளது.1920 x 1080 Pixel Resolution இல் அமைந்த 5 அங்குல Full HD IPS திரையை இது கொண்டுள்ளதுடன் 7.6 மில்லிமீட்டர் தடிப்பையும் 145 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Lenovo Vibe Shot ஸ்மார்ட் போன்


மேலும் 1.7GHz வேகத்தில் இயங்கும் Octa-core Qualcomm Snapdragon 615 64-bit Processor மற்றும் 3GB RAM போன்றவற்றையும் இது கொண்டுள்ளது.

இவற்றுடன் 128GB வரையில் அதிகரிக்க முடியுமான 32GB உள்ளக நினைவகத்துடன் இது கொண்டுள்ள 3000mAh வலுவுடைய Battery ஆனது நீண்ட நேரத்துக்கு மின்னை சேமிக்கும் ஆற்றல் உடையதாகும்.

இவைகள் தவிர 4G LTE, Dual Sim, Wifi, Bluetooth, GPS போன்ற வசதிகளை கொண்டுள்ள இது கூகுளின் Android 5.0 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

இதன் விலையானது 315.99 அமெரிக்க டொலர்களாக குறிக்கப்பட்டுள்ளது இது கிட்டத்தட்ட 21000 இந்திய ரூபாய்கள் ஆகும். 

Sources: gearbest

Love to hear what you think!

2 comments:

 1. தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . உங்கள் சேவை மேன்மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு நன்றி....
   புதுமைகள் படைக்கவுள்ளோம்.....
   தொடர்ந்தும் இணைந்திருங்கள்... (h)

   நீக்கு

 
Top