ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கும் சுலபமாக ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் PDF ஆவண வடிவமானது அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


PDF ஆவணம்


இருப்பினும் பல்வேறு தேவைகளுக்காக PDF வடிவில் அமைந்த ஆவணங்களை Microsoft Office, Excel, PowerPoint, HTML, EPUB, Image போன்ற வடிவங்களுக்கு மாற்ற வேண்டிய தேவையும் ஏற்படலாம்.

இது போன்ற சந்தர்பங்களில் எமக்கு உதவுகின்றது Wondershare PDF Converter எனும் மென்பொருள்.


விண்டோஸ் கணினியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது PDF ஆவணங்களை மிக இலகுவாகவும் விரைவாகவும் Microsoft Office, Excel, PowerPoint, HTML, EPUB, Image போன்ற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள என பல்வேறு வசதிகளை தருகின்றது.


Wondershare PDF Converter மென்பொருள்  இடைமுகம்

  • இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள Add Files என்பதை சுட்டுவதன் மூலமோ அல்லது Drag and Drop செய்வதன் மூலமோ ஏனைய வடிவங்களுக்கு மாற்ற வேண்டிய PDF ஆவணங்களை இந்த மென்பொருளில் உள்ளிட்டுக் கொள்ள முடியும். (இல: 01)

  • நீங்கள் உள்ளிட்ட PDF ஆவணத்தில் உள்ள அனைத்து பக்கங்களையும் குறிப்பிட்ட இன்னுமொரு வடிவத்திற்கு மாற்ற வேண்டும் எனின் Selected Page என்பதற்குக் கீழ் இருக்கும் ALL என்பதை தெரிவு செய்லாம், அல்லது அந்த PDF ஆவணத்தின் ஒரு சில பக்கங்களை மாத்திரம் குறிப்பிட்ட இன்னுமொரு வடிவத்திற்கு மாற்ற வேண்டும் எனின் Selected Page என்பதற்குக் கீழ் இருக்கும் கட்டத்தில் குறிப்பிட்ட பக்கத்தின் எண்களை உள்ளிடலாம். (இல: 02)

  • பின் இதில் தரப்பட்டுள்ள Output Format எனும் பகுதியின் ஊடாக குறிப்பிட்ட PDF ஆவணத்தை மாற்ற வேண்டிய Microsoft Office, Excel, PowerPoint, HTML, EPUB, Image போன்ற வடிவங்களுள் உங்களுக்கு தேவையான ஒன்றினை தெரிவு செய்யலாம். (இல: 03)
Wondershare PDF Converter பயன்பாடு

  • மேலும் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள Advanced Settings எனும் பகுதியின் ஊடாக நீங்கள் மாற்றக்கூடிய வடிவத்தின் மேலதிக பண்புகளை தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் PDF ஆவணம் ஒன்றினை புகைப்பட வடிவத்திற்கு (Image) மாற்ற விரும்பினால் Advanced Settings என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட புகைப்படமானது .BMP, .GIF, .TIFF, .PNG போன்ற வடிவங்களில் உங்களுக்குத் தேவையான வடிவத்தினை தெரிவு செய்யலாம். 

  • அதே போல் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள Output Folder எனும் பகுதியின் ஊடாக நீங்கள் வேறு வடிவங்களுக்கு மாற்றும் ஆவணம் எந்த கோப்புறையில் சேமிக்கப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யலாம். (இல: 04)

  • இறுதியாக குறிப்பிட்ட மென்பொருளின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள Convert என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட PDF ஆவணத்தை நீங்கள் தெரிவு செய்த வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். (இல: 05)

இந்த மென்பொருளானது சோதனை பதிப்பு மற்றும் கட்டணம் செலுத்தி பெறவேண்டிய பதிப்பு என இரு வேறு பதிப்புக்களை கொண்டுள்ளது. இதன் சோதனை பதிப்பானது வரையறுக்கப்பட்ட வசதிகளை மாத்திரமே தருகின்றது. எனினும் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பதிப்பில் பூரண வசதிகளை பெற முடியும்.


Wondershare PDF Converter மென்பொருள் வெகுமதி


பின்வரும் இணைப்பில் சென்று உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Get it Now என்பதை சுட்டுவதன் மூலம் 59.95 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கட்டணம் செலுத்தி பெறவேண்டிய இந்த மென்பொருளுக்கான Licence Key ஐ உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே பெற்றுக்கொள்ளலாம்.VISIT TO Wondershare PDF Converter Promotion Pageதொடர்புடைய இடுகை: PDF ஆவணங்களில் நீங்கள் விரும்பும் மாற்றத்தினை ஏற்படுத்த உதவும் இலவச மென்பொருள் 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top