விண்டோஸ் கணினியில் தரப்பட்டுள்ள Run Program ஐ பயன்படுத்தி எமக்குத் தேவையான எந்த ஒரு வசதியையும் மிக விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்.


அந்த வகையில் விண்டோஸ் கணினியில் அடிக்கடி பயன்படக்கூடிய பத்து Run கட்டளைகள் தொடர்பான பதிவினை நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.கீழுள்ள இணைப்பின் மூலம் எமது முன்னைய பதிவை பார்க்கலாம்.

விண்டோஸ் கணினி பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பயனுள்ள Run கட்டளைகள் (Commands) (பகுதி 1)

அது போன்ற பயன்படக்கூடிய மேலும் சில Run கட்டளைகள் பின்வருமாறு. 1. எமது கணினியின் வன்தட்டில் நாம் கோப்புக்களை ஆங்காங்கே Copy, Past செய்யும் போதும் மென்பொருள்களை நிறுவும் போதும் அவைகள் கணினி வன்தட்டின் வெவ்வேறு இடங்களில் எழுதப்படுகின்றன. எனவே நாம் கணினி மூலம் குறிப்பிட்ட ஒரு செயற்பாட்டில் ஈடுபடும் போது அது தொடர்பான கோப்புக்களை கணினி வாசிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றது. எனினும் விண்டோஸ் கணினியில் தரப்பட்டுள்ள Disk Defragmenter Tool ஐ பயன்படுத்தி வெவ்வேறு இடங்களில் எழுதப்பட்டுள்ள கோப்புக்களை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும். இந்த Tool ஐ dfrgui எனும் Run Command ஐ பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

  Disk Defragmenter Tool கணினி 2. dpiscaling எனும் Run கட்டளையை பயன்படுத்தி எமது கணினி திரை தொடர்பான அமைப்புக்களை மாற்றியமைக்கும் சாளரத்தினை பெற்றுக்கொள்ளலாம். இந்த சாளரத்தின் மூலம் எமது கணினியில் தோன்றும் எழுத்துக்களின் தோற்றம், கணினி திரையின் வர்ணம், மற்றும் அதன் பிரகாசம் தொடர்பான இன்னும் பல அமைப்புக்களை மாற்றி அமைக்கலாம்.

  விண்டோஸ் Display சாளரம்


 3. dccw எனும் Run கட்டளையின் மூலம் கணினி திரையின் வர்ணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெரிவு செய்வதற்கான சாளரத்தினை நேரடியாக வரவழைக்கலாம்.

  கணினி Display Color Calibration சாளரம்

 4. magnify எனும் Run கட்டளையை பயன்படுத்தி Magnifier எனும் Tool ஐ வரவழைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் கணினியின் முழுத் திரையையுமோ குறிப்பிட்ட ஒரு பகுதியினையோ உருப்பெருக்கி பார்க்க முடியும். இந்த வசதியானது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக அமையும்.

 5. விண்டோஸ் Magnifier மென்பொருள்

 6. உங்கள் கணினிக்கு தீங்கு விளைவிக்கும் நிரல்களை கண்டறிந்து அவற்றினை நீக்கிக் கொள்ளும் வசதி உங்கள் கணினியிலேயே தரப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்கென Malicious Software Removal Tool எனும் மென்பொருள் விண்டோஸ் கணினியில் தரப்பட்டுள்ளது. இதனை வரவழைத்துக் கொள்ள mrt எனும் Run கட்டளையை பயன்படுத்தலாம்.

  கணினி Malicious Software Removal Tool

 7. உங்கள் கணினியில் நீங்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளை குரல் வடிவில் கேட்க வேண்டும் எனின் உங்களுக்கு உதவுகின்றது Narrator எனும் Tool இதனை வரவழைத்துக் கொள்ள narrator எனும் Run கட்டளையை பயன்படுத்தலாம்.

  கணினி Narrator மென்பொருள்

 8. Notepad பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும் இந்த Runகட்டளையை பயன்படுத்து இந்த Notepad ஐ கூட வரவழைக்கலாம் என்றால் பாருங்களேன். இதற்கு notepad எனும் Run கட்டளையை பயன்படுத்தலாம். 9. நாம் கணினியை பயன்படுத்த ஆரம்பித்த நாட்களில் விண்டோஸ் கணினியில் தரப்பட்டுள்ள Paint வசதியை மிகவும் ஆவலுடன் பயன்படுத்திய ஞாபகம் அதிகமானவர்களுக்கு இருக்கலாம். இதனை Run கட்டளை மூலம் திறந்து கொள்ள mspaint எனும் Run கட்டளைகளை பயன்படுத்தலாம்.


 10. உங்கள் கணினியில் Phone Dialer கூட தரப்பட்டுள்ளது. இது என்ன புதுக்கதை என்று கேர்காதீர்கள் dialer எனும் Run கட்டளை மூலம் Phone Dialer ஐ வரவழைத்துக் கொள்ளலாம். முயற்சித்துப் பாருங்கள்.

  விண்டோஸ் Phone Dialer

 11. உங்கள் கணினியில் தரப்பட்டுள்ள Registry Editor ஐ பயன்படுத்தி உங்கள் கணினியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் கணினியின் வேகத்தை அதிகரித்துக்கொள்ளவும் முடியும். மேலும் கணினியுடன் இணைக்கப்படும் USB Flash Drive சாதனங்களுக்கு தரவுகள் பரிமாற்றப் படுவதை தடை செய்யலாம். எந்த வகையிலும் மாற்ற முடியாத பின்புலப் படங்களை உங்கள் கணினிக்கு இடலாம், குறிப்பிட்ட ஒரு மென்பொருளை பயன்படுத்த முடியாதவாறு தடை செய்யலாம், Right Click Context Menu மூலம் மென்பொருள்களை திறக்கலாம். இது போன்று இன்னும் ஏராளமான புதுமைகளை இந்த Registry Editor மூலம் மேற்கொள்ளலாம். எனினும் எவ்வித வழிகாட்டல்களும் இன்றி இதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம். இதனை வரவழைத்துக் கொள்ள regedit எனும் Run கட்டளையை பயன்படுத்தலாம்.

Love to hear what you think!

1 comments:

 
Top