கணினியானது குறைந்த வேகத்தில் இயங்குவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.

Wise Care 365 மென்பொருள் இடைமுகம்.


கணினியை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அதில் தேங்கும் தேவையற்ற கோப்புக்கள் காரணமாகவும் கணினியில் நிறுவப்படும் அளவுக்கு அதிகமான மென்பொருள்கள் காரணமாகவும், கணினி துவங்கும் போது கணினியின் துவக்கத்தில் இருந்தே இயங்க ஆரம்பிக்கும் மென்பொருள்களின் செயற்பாடுகள் காரணமாகவும் Registry இல் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் என பல்வேறு காரணங்களால் எமது கணினி வேகமாக இயங்க மறுக்கிறது.
எனவே இது போன்ற குறைபாடுகளை இனங்கண்டு அவற்றினை நிவர்த்தி செய்வதன் மூலம் எமது கணினியை வேகமாக இயங்க செய்வதற்கு ஏராளமான மென்பொருள்கள் உதவுகின்றன.

அவ்வாறு எமது கணினியை வேகமாக இயங்க செய்யும் மிகச்சிறந்த மென்பொருள்களுள் Wise Care 365 எனும் மென்பொருளும் ஒன்றாகும்.


இந்த மென்பொருளானது உங்கள் கணினியில் இருக்கக்கூடிய மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தருவதுடன் உங்கள் கணினியில் இருக்கக் கூடிய இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இது தீர்வை தருகின்றது.

இதன் மூலம் பெற முடியுமான சில முக்கிய வசதிகள் பின்வருமாறு.

  • உங்கள் கணினியில் சேமிக்கப்படும் தேவையற்ற தற்காலிக கோப்புக்கள், தேவையற்ற Registry உள்ளீடுகள், தேவையற்ற Shortcut கள், உங்கள் இணைய உலாவியால் சேமிக்கப்படும் Browsing history, traces, Cache, Cookies போன்றவற்றினை இனங்கண்டு நீக்குகிறது.
  • உங்கள் கணினியின் வன்தட்டை (Hard Disk) சீர் செய்வதன் மூலம் (Disk Defrag) கணினியை வேகமாக இயங்கச் செய்கின்றது.
  • கணினி துவங்கும் போது இயங்க ஆரம்பிக்கும் மென்பொருள்களை இனங்கண்டு அவற்றின் செயற்பாட்டை கட்டுப்படுத்த உதவுகின்றது.
  • உங்கள் தனிப்பட்ட தகவல்களை மீளவும் Recovery செய்து பெற்றுக்கொள்ள முடியாத வகையில் அவற்றினை முற்றாக நீக்கிக்கொள்ள உதவுகின்றது.
  • இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள Process Monitor மூலம் உங்கள் கணினியின் பின்புலத்தில் இயங்கும் மென்பொருள்களை இனங்கண்டு கொள்ளவும் தேவையற்ற மென்பொருள்களின் செயற்பாட்டை தடை செய்துகொள்ளவும் முடியும். 
  • உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து வன்பொருள்கள் தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.

தொடர்புடைய இடுகை: உங்கள் கணனி, மற்றும் Android சாதனங்களின் மிக வேகமான செயற்பாட்டுக்கு உதவும் இலவச மென்பொருள்

இவைகள் தவிர இன்னும் பல்வேறு வசதிகளை தரும் இந்த மென்பொருளானது இலவச பதிப்பு கட்டணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பு என இரு வேறு பதிப்புக்களை கொண்டுள்ளது. இதன் இலவச பதிப்பில் வரையறுக்கப்பட்ட வசதிகளே தரப்பட்டுள்ளது. என்றாலும் கட்டணம் செலுத்தி பெரும் பதிப்பின் மூலம் பூரண பயனை பெற்றுக் கொள்ளலாம்.

விடயம் என்னவெனில் கட்டணம் செலுத்தி பெறவேண்டிய மென்பொருளுக்கான License Key இலவசமாக வழங்கப்படுகின்றது.

Wise Care 365 License Key free

பின்வரும் இணைப்பில் சென்று உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே இதன் இலவச License Key அனுப்பி வைக்கப்படும்.

நீங்களும் இதனை பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.மேலே தரப்பட்டுள்ள இணையப் பக்கமானது ஜேர்மன் மொழியில் அமைந்துள்ளது. குறிப்பிட்ட பக்கத்தின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Language Bar மூலம் குறிப்பிட்ட பக்கத்தினை தமிழ் மொழிக்கோ, ஆங்கில மொழிக்கோ மாற்றிக் கொள்ளலாம்.

Wise Care 365 மென்பொருளை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக.Download Wise 365 (5.84MB)


தொடர்புடைய இடுகை: கணனியின் மிகவேகமான செயற்பாட்டுக்கு உதவுகிறது Privacy Eraser எனும் இலவச மென்பொருள்

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top