இன்றைய தொழில்நுட்ப உலகில் கணினி என்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் தொழில்நுட்ப உலகுக்கு இன்றைய ஸ்மார்ட் சாதனங்களும் முக்கிய ஒன்றாக உருவெடுத்துள்ளது.

Pdf ஆவணம் android


எனவே கணினியில் நாம் பயன்படுத்திய ஏராளமான வசதிகளும், அவற்றுக்கான மென்பொருள்களும் ஸ்மார்ட் சாதனங்களை நோக்கி நகர்ந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

அந்தவகையில் Microsoft இன் Microsoft Office, Google இன் கூகுள் குரோம், Mozilla இன் Firefox என அத்தனையும் படிப்படியாக ஸ்மார்ட் சாதனங்களை நோக்கி நகர்ந்துள்ளமையை அவதானிக்கலாம்.

எனவே இன்று அன்றாட தகவல்களை அறிந்து கொள்வதற்கும் இன்னும் பல்வேறு தேவைகளுக்காக இணையத்தை வலம் வருவதற்கும் என நாம் எமது ஸ்மார்ட் சாதனங்களையே அதிகம் பயன்படுத்துகின்றோம்.

எனவே அவ்வாறன சாதனங்கள் மூலம் நாம் இணையத்தை வலம் வரும் போது இணையத்தில் உள்ள பயனுள்ள தகவல்களை எமது ஸ்மார்ட் சாதனத்தில் PDF வடிவத்தில் சேமித்துக் கொள்வதன் மூலம் அவற்றினை இணைய இணைப்பு இல்லாத ஒரு சந்தர்பத்திலும் மீட்டி பார்த்துக்கொள்ள முடியும்.

தொடர்புடைய இடுகை: உங்கள் Android சாதனத்துக்கு வரும் குறுஞ்செய்திகளை (SMS) தானாகவே Google Drive இல் சேமித்துக் கொள்வது எவ்வாறு?

நீங்கள் கூகுள் குரோம் அல்லது Firefox இணைய உலாவியை உங்கள் Android சாதனத்தில் பயன்படுத்துபவர் எனின் நீங்கள் விரும்பும் இணையப் பக்கங்களை PDF வடிவில் சேமித்துக்கொள்ள முடியும்.

நீங்கள் விரும்பும் இணையப்பக்கங்களை PDF வடிவில் சேமித்துக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.

 1. நீங்கள் PDF வடிவில் சேமிக்க விரும்பும் இணைய பக்கத்தை உங்கள் Android சாதனத்தில் உள்ள Google Chrome இணைய உலாவியை பயன்படுத்தி திறந்து கொள்க.

 2. பின் Google Chrome இணைய உலாவியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Menu Button ஐ சுட்டுக.


  குரோம் இல் PDF சேமிப்பு கூகுள் குரோம் android pdf

 3. இனி தோன்றும் சாளரத்தில் Print என்பதை சுட்டுவதன் மூலம் தோன்றும் சிறிய சாளரத்தில் Save as PDF என்பதை தெரிவு செய்து Save என்பதை சுட்டுக.

  கூகுள் குரோம் PDF PDF சேமித்தல்


 4. பின்னர் சிறிது நேரத்தின் பின் தோன்றும் இடைமுகத்தில் குறிப்பிட்ட PDF கோப்பிற்கு பெயர் ஒன்றினை இட்டு Save என்பதை அழுத்துவதன் மூலம் அதனை PDF வடிவில் சேமித்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான்.

இனி இணைய இணைப்பு இல்லாத போதும் கூட சேமிக்கப்பட்ட PDF கோப்பினை திறந்து தேவையான தகவல்களை மீட்டிப் பார்க்க முடியும்.

நீங்கள் பயன்படுத்துவது Firefox இணைய உலாவி எனின் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

 1.  PDF வடிவில் சேமிக்க விரும்பும் இணைய பக்கத்தை உங்கள் Android சாதனத்தில் உள்ள Firefox இணைய உலாவியை பயன்படுத்தி திறந்து கொள்க.

 2. பின்னர் Menu Button ஐ சுட்டுவதன் மூலம் திறக்கும் சாளரத்தில்உள்ள Page என்பதை சுட்டுக.

  Firefox Android Option menuFirefox Android PDF


 3. இனி உங்களுக்கு Save as PDF என்ற வசதி கிடைக்கும்.

 4. பின் அதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட இணைய பக்கத்தை PDF வடிவில் சேமித்துக் கொள்ள முடியும்.
அவ்வளவுதான்.


இது போன்ற மேலும் பல பயனுள்ள தொழில்நுட்ப தகவல்களை அறிந்துகொள்வதற்கு எமது Facebook மற்றும் Google Plus பக்கங்களின் ஊடாக தொடர்ந்தும் இணைந்திருங்கள்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top