தொழில்நுட்ப பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Samsung நிறுவனத்தின் Samsung Galaxy S6 Edge+ ஸ்மார்ட் போன் உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சுங் Galaxy S6 Edge+


முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட  Galaxy S6 Edge போன்று இருபக்கமும் சற்று வளைந்த 5.7 அங்குல Quad HD Super AMOLED திரையை இது கொண்டுள்ளது.மேலும் Android 5.1.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது 64bit திறனில் அமைந்த Exynos 7420 octa-core Processor ஐ தன்னகமாக கொண்டுள்ளது. Exynos 7420 octa-core எனும் இந்த Processor வகையானது 2.1GHz quad core மற்றும் 1.5GHz quad core processor களை கொண்டு அமைந்ததாகும்.

32GB, 64GB போன்ற உள்ளக நினைவகங்களை கொண்டுள்ள இவற்றின் நினைவகங்களை நாம் ஏற்கனவே எமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது போல் microSD Card களை பயன்படுத்தி அதிகரிக்க முடியாது. எனினும் இதற்கு மாற்றீடாக இணைய சேமிப்பகங்களை பயன்படுத்தலாம்.

மேலும் இது 4GB RAM ஐ தன்னகமாக கொண்டுள்ளது. இது Android சாதனத்தின் தடையற்ற வேகத்திற்கு போதுமானது. அத்துடன் Slow motion video, Auto focus வசதிகளுடன் 4k தெளிவுத்திறனில் வீடியோ கோப்புக்களை பிடிப்பதற்கான 16 Mega Pixel பிரதான Camera ஐ கொண்டுள்ள இது 5 Mega pixel முன் பக்க Camera ஐயும் கொண்டுள்ளது.

மேலும் ஸ்மார்ட் போனில் இருந்து வேறு பிரிக்க முடியாத வகையில் 3000 mAh திறனுடைய Battery ஐ கொண்டுள்ள இது 4G LTE, Fingerprint Sensor, Bluetooth v4.2 போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.


154.4 மில்லி மீட்டர் நீளம் 75.8 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 6.9 மில்லி மீட்டர் தடிப்பை கொண்டுள்ள இது 153 கிராம் எடையை கொண்டுள்ள அதேவேளை பொன் நிறம், Silver கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வர்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Sources: Samsung

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top