Samsung நிறுவனம் அதன் Samsung Galaxy S6 edge+ மற்றும் Samsung Galaxy Note 5 ஆகிய ஸ்மார்ட் போன்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது.



அந்த வகையில் Samsung Galaxy S6 edge+ ஸ்மார்ட் போன் தொடர்பான விபரக்குறிப்புக்களை நாம் எமது முன்னைய பதிவின் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.



கிட்டத்தட்ட  Samsung Galaxy S6 edge+ ஸ்மார்ட் போனை ஒத்த வசதிகளையே Samsung Galaxy Note 5 ஸ்மார்ட் போனும் கொண்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட நினைவகம் 

  • இந்த இரு ஸ்மார்ட் போன்களும் 32GB/64GB ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டுள்ளது. இவற்றின் நினைவகங்களை microSD card பயன்படுத்தி அதிகரிக்க முடியாது எனினும் மேலும் நினைவகத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதெனின் Google Drive, One Drive, Dropbox போன்ற இணைய சேமிப்பகங்களை பயன்படுத்தலாம்.

Galaxy Note 4 உடன் ஒப்பிடுகையில் Galaxy Note 5 இன் Battery

  • மேலும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Note 4 ஆனது 3220 mAh திறனுடைய Battery ஐ கொண்டிருக்கும் அதேவேளை Samsung Galaxy Note 5 ஆனது 3000 mAh வலுவுடைய Battery ஐயே கொண்டுள்ளது. இதற்கு Galaxy Note 4 ஸ்மார்ட் போனை விட Galaxy Note 5  ஸ்மார்ட் போன் தடிப்பில் குறைந்ததாக அமைந்திருப்பதும் ஒரு காரணமாக அமையலாம்.

மின்னேற்றுவதற்கான வசதி மற்றும் மின்னேற்றப்படும் வேகம்.

  • அத்துடன் மிகவேகமாக மின்னேற்றிக் கொள்ளக்கூடிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இதனை 90 நிமிடங்களுக்குள் முழுமையாக மின்னேற்றிக் கொள்ள முடியுமான அதேவேளை கம்பியற்ற முறையிலும் (Wireless) இதனை மின்னேற்றிக் கொள்ள முடியும். கம்பியற்ற முறையில் மின்னேற்றும் போது குறிப்பிட்ட சாதனத்தை 120 நிமிடங்களுக்குள் மின்னேற்றிக்கொள்ள முடியும்.

திரை மற்றும் இயங்குதளம்.

  • மேலும் இது  5.7அங்குல Quad HD Super AMOLED திரையை கொண்டுள்ளதுடன் Google இன் மிக அண்மைய பதிப்பான Android 5.1.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. 

Octa-core Processor மற்றும் 4GB RAM

  • இவற்றுடன் Exynos 7420 octa-core Processor மற்றும் 4GB (LPDDR4) RAM போன்றவற்றினையும் இது கொண்டுள்ளது.

Camera

  • அத்துடன் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 5 Megapixel திறனுடைய முன்பக்க Camera ஐ இது கொண்டுள்ளதுடன் Phase detection auto focus,Slow motion video மற்றும் 4K Video போன்ற வசதிகளுடன் கூடிய 16 Mega Pixel திறனுடைய பிரதான Camera ஐயும் இது கொண்டுள்ளது.


ஏனைய வசதிகள் 

  • இவைகள் தவிர 4G LTE. Wifi, Bluetooth 4.2, NFC போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது.

அளவு 

  • 153.2 மில்லிமீட்டர் நீளம் 76.1 அகலம் 7.6 தடிப்பை கொண்டுள்ள இது கருப்பு, வெள்ளை, வெள்ளி மற்றும் பொன் நிறங்களில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

விசேட அம்சம் 

  • Samsung Galaxy S6 edge+ மற்றும் Samsung Galaxy Note 5 போன்ற சாதனங்களுடன் Hardware Keyboard உம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Sources: Samsung

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top