உங்கள் Android சாதனத்தில் இருக்கும் வீடியோ பாடல்களை அல்லது ஏனைய வீடியோ கோப்புக்களை Mp3, AAC போன்ற Audio வடிவங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை உள்ளதா?

 Android MP3 Video Converter செயலி

அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது MP3 Video Converter எனும் Android சாதனங்களுக்கான செயலி.


உலகளாவிய ரீதியில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியானது வீடியோ கோப்புக்களை மிக வேகமாக Audio வடிவத்திற்கு மாற்றித்தருகிறது.


3GP, FLV, MP4 போன்ற வீடியோ வடிவங்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்த செயலியானது நீங்கள் Audio வடிவத்திற்கு மாற்றும் ஒலிக் கோப்பின் Title, Album, Artist என்பவைகளையும் உள்ளிட்டுக் கொள்ள வழிவகுக்கின்றது.

இந்த செயலியின் பிரதான இடைமுகத்தில் தரப்பட்டுள்ள மூன்று படிமுறைகளின் ஊடாக எந்த ஒரு வீடியோ கோப்பினையும் மிக இலகுவாக Audio வடிவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.


 Android MP3 Video Converter முகப்பு

  • இந்த செயலியின் பிரதான இடைமுகத்தில் முதலாவதாக தரப்பட்டுள்ள Select எனும் பகுதியின் ஊடாக நீங்கள் Mp3 அல்லது AAC வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள விரும்பும் வீடியோ கோப்பை தெரிவு செய்து கொள்ள முடியும்.
  • இனி அதற்குக் கீழ் தரப்பட்டுள்ள Change எனும் பகுதியின் ஊடாக Mp3 அல்லது AAC வடிவங்களுக்கு மாற்றப்படும் கோப்பு சேமிக்கப்பட வேண்டிய இடத்தை மாற்றிக் கொள்ளலாம். 
  • பின்னர் Convert என்பதை அழுத்த குறிப்பிட்ட வீடியோ கோப்பு Mp3, AAC வடிவங்களுக்கு மாற்றப்பட்டு விடும்.

இனி அவற்றினை Ringing Tone ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனை தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Download MP3 Video Converter For Android


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top