ஸ்மார்ட் சாதனம் என்றாலே Android சாதனங்கள் தான் எனும் அளவுக்கு Android பிரபலாமாகி விட்ட இன்றைய நிலையில் அனைவரது கைகளிலும் Android ஸ்மார்ட் போன்கள் வலம் வருவதை அவதானிக்க முடிகின்றது.

Android இயங்குதளம்


அந்த வகையில் Android சாதனங்களின் அதிகரித்த பாவனைக்கு ஏற்றாட் போல் அவற்றுக்கான செயலிகளும் அன்றாடம் அறிமுகப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

எது எப்படியோ நீங்களும் Android சாதனத்தை பயன்படுத்துவர் எனின் இந்த விடயத்தில் சற்று அவதானமாக இருங்கள்.

அதாவது நாம் எமது Android சாதனங்களில் உள்ள செயலிகளை ஏனையவர்கள் பயன்படுத்த முடியாதவாறு ஏராளமான செயலிகளை பயன்படுத்தி அவற்றுக்கு கடவுச்சொற்களை இடுகின்றோம் அல்லவா?

அத்துடன் எமது Android சாதனத்தில் உள்ள Gallery இற்கு கடவுச்சொல்லை இட்டு விட்டால் அதில் உள்ள புகைப்படங்கள் வீடியோ கோப்புக்களை ஏனையவர்களால் பார்க்க முடியாது என பெருமூச்சு விட்டுக்கொள்கின்றோம் அல்லவா?

அதே போல் File Explorer செயலிகளுக்கும் அவ்வாறு கடவுச்சொல் இட்டுவிட்டால் அந்த Android சாதனம் பூரணமாக எமது கட்டுப்பாட்டில் தான் என எண்ணலாமா?

அது தான் முடியாது...............

உண்மையில் இது நாம் எமது தனிப்பட்ட தகவல்களை ஏனையவர்களிடம் இருந்து பாதுகாக்க சிறந்த முறை என குறிப்பிட்ட விட முடியாது.

அதாவது இவ்வாறான கடவுச்சொல் இடுவதற்காக நாம் பயன்படுத்தக் கூடிய செயலிகளை Application manager ஊடாக Force Stop செய்வதனால் அவ்வாறு நீங்கள் இடக்கூடிய கடவுச்சொற்களை நீக்கிக் கொள்ள முடியும்.

நீங்களும் இதனை சோதித்துப் பார்க்க விரும்பினால் பின்வரும் வழிமுறையில் முயற்சித்துப் பாருங்கள்.

  • முதலில் உங்கள் Android சாதனத்தில் உள்ள ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஏதாவது ஒன்றினை Lock செய்து கொள்ளுங்கள்.
Android Gallery கடவுச்சொல் Android Application manager

  • பின்னர் Settings பகுதியின் ஊடாக Application Manager ஐ திறந்து கொள்க.
  • இனி நீங்கள் கடவுச்சொல் இடுவதற்கு பயன்படுத்திய செயலியை தெரிவு செய்து சுட்டுக. இதன் போது தோன்றும் சாளரத்தில் Force Stop என்பதை சுட்டுக.
App Locker Not SafeAndroid Force Stop application

  • இனி நீங்கள் Lock செய்த செயலியை அல்லது கோப்பினை திறந்து பாருங்கள். அது எந்த வித தடையும் இன்றி திறக்கப்படுவதனை அவதானிக்கலாம்.


எனவே இவ்வாறான செயலிகளை பயன்படுத்தி Lock செய்து கொள்ளும் முறையானது உங்களுக்கு முழுமையான பாதுகாப்பினை தந்து விடும் என எண்ணிவிட வேண்டாம். மேற் குறிப்பிட்ட முறையில் எந்த ஒருவரும் உங்கள் Android சாதனத்தில் உள்ள உங்களது தனிப்பட்ட தகவல்களை அணுகலாம்.

தொடர்புடைய இடுகை: கவனத்திற்கு: இணைய உலாவிகளில் சேமிக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் போன்றவற்றினை எந்த ஒருவராலும் மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.எனினும் நாம் எமது முன்னைய பதிவின் மூலம் கோப்புக்களுக்கு கடவுச்சொல் இட்டு பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்தி இருந்தோம் அதன் மூலம் மேற்குறிப்பிட்ட சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top