கூகுள் குரோம் இணைய உலாவியானது அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த இணைய உலாவியாகும்.


கூகுள் குரோம் இணைய உலாவி


கூகுளால் நிர்வகிக்கப்படும் இந்த இணைய உலாவியானது மிக வேகமாக இயங்கக்கூடிய அதேநேரம் பல்வேறுபட்ட கவர்சிகரமான வசதிகளையும் அதன் பயனர்களுக்கு வழங்குகின்றது.

கூகுள் குரோம் இணைய உலாவியானது ஆரம்பத்தில் கணினிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தற்பொழுது மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் மொபைல் மூலமான இணையப் பாவனையிலும் இது தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கி உள்ளது.

இதனடிப்படையில் கணினியில் பயன்படுத்தப்படும் கூகுள் குரோம் இணைய உலாவி தொடர்பான பல உபாயங்களையும், உதவிக்குறிப்புகளையும் நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

தொடர்புடைய இடுகை: Google Chrome இணைய உலாவியின் Address Bar இல் மறைந்திருக்கும் வசதிகள்.


அதே போன்ற சில மறைந்திருக்கக் கூடிய வசதிகள் ஸ்மார்ட் சாதனங்களுக்கான கூகுள் குரோம் இணைய உலாவியிலும் தரப்பட்டுள்ளது.

Android கூகுள் குரோம் zoom

அந்தவகையில் ஸ்மார்ட் சாதனத்தில் தரப்பட்டுள்ள கூகுள் குரோம் இணைய உலாவி மூலம் நீங்கள் இணைய தளங்களை வலம் வரும் போது இணையத்தில் உள்ள புகைப்படங்கள் எழுத்துக்கள் போன்ற எந்த ஒன்றினையும் உருப்பெருக்கிப் பார்ப்பதற்கான வசதி கூகுள் குரோம் இணைய உலாவியில் தரப்பட்டுள்ளது.

எனினும் அது செயற்படுத்தப்பட்ட நிலையில் இல்லை.


தொடர்புடைய இடுகை: இணையத்தில் உள்ள புகைப்படங்களை உருப்பெருக்கி பார்க்கவும் அவற்றினை Keyboard விசைகளைக் கொண்டு கட்டுப்படுத்துவதும் எவ்வாறு?


இருப்பினும் ஸ்மார்ட் சாதனத்தில் உள்ள கூகுள் குரோம் இணைய உலாவியின் Settings பகுதியின் ஊடாக இந்த வசதியினை செயற்படுத்திக் கொள்ள முடியும்.

  • இதற்கு உங்கள் ஸ்மார்ட் சாதனத்தில் உள்ள கூகுள் குரோம் இணைய உலாவியை திறந்து அதன் Settings பகுதிக்கு செல்க.

மொபைல் கூகுள் குரோம் அமைப்புக்கள்மொபைல் கூகுள் குரோம் Accessibility


  • பின்னர் Accessibility எனும் பகுதியை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் உள்ள Force enable zoom என்பதை Tick செய்க.
Android கூகுள் குரோம் zoom அமைப்புக்கள்
அவ்வளவுதான்.


இனி உங்கள் ஸ்மார்ட் சாதனத்தின் திரையின் மேல் உங்கள் இரு விரல்களை வைத்து நேர் எதிரே நகர்த்துவதன் மூலம் எந்த ஒரு இணைய தளத்தையும் உருப்பெருக்கி பார்க்கக் கூடியதாக இருக்கும்.


நீங்கள் விண்டோஸ் கணினி மூலம் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்துபவர் எனின் Ctrl விசையுடன் சுட்டியின் (Mouse) Scroll Button ஐ சுழற்றுவதன் மூலம் இணைய தளங்களை உருப்பெருக்கி பார்க்க முடியும். அல்லது கூகுள் குரோம் இணைய உலாவியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Menu Button ஐ சுட்டும் போது பெறப்படும் சாளரத்திலும் இதற்கான வசதி தரப்பட்டுள்ளது.

தொடர்புடைய இடுகை: இணைய இணைப்பு இல்லாத போதும் இணையதளங்களை பார்க்க வேண்டுமா? (Android, iOS & PC)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top