இன்றைய உலகின் மிகப்பெரிய மற்றும் நம்பர் வன் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு சமூக வலைதளமே பேஸ்புக் ஆகும்.


பேஸ்புக்


உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள உதவுவது முதல் உறவுகளை பேணுவது வரை ஏராளமான பயன்களை தரக்கூடிய இந்த சமூக வலைத்தளம் பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூற வேண்டும்.அந்தவகையில் 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஊவக்கப்பட்ட இது இன்று தனது 12 ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.இந்த தினத்தை நண்பர்கள் தினமாக அறிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம் உங்கள் கடந்தகால நினைவுகளை தொகுத்து அழகிய வீடியோ கோப்பு ஒன்றையும் உருவாக்கிக் கொள்ள வழிவகுத்துள்ளது.

பின்வரும் இணைப்பில் செல்வதன் மூலம் உங்களுக்கான வீடியோ தொகுப்பை காணலாம். அதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழ முடியும்.


மேலும் சவால்கள் மிக்க உலகில் தனது வெற்றிப்பயணத்தை  பேஸ்புக் தளம் மேற்கொண்டது இவ்வாறுதான்.


 • பேஸ்புக் தளமானது 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் திகதி Thefacebook எனும் பெயரில் Harvard பல்கலைகழக மாணவர் Mark Zuckerberg என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அன்று அதன் இணைய முகவரி www.thefacebook.com என்பதாகும்.

 • ஆரம்பத்தில் Harvad பல்கலைகழக மாணவர்களால் மாத்திரமே பயன்படுத்த முடியுமாக இருந்த பேஸ்புக் தளமானது 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி Boston பல்கலை கழகம், Boston கல்லூரி, Northeastern பல்கலைகழகம், Stanford பல்கலைகழகம், Dartmouth கல்லூரி, Columbia கல்லூரி மற்றும் Yale பல்கலைகழகம் போன்றவற்றுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

மார்க் முகநூல்


 • 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி Mark Zuckerberg, Dustin Moskovitz, மற்றும் Eduardo Saverin என்பவர்களால் Thefacebook.com பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்ட கம்பனியாக உருவாக்கப்பட்டது.

 • 2004 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி பீட்டர் தீல் என்பவரால் 500,000 அமெரிக்க டொலர்கள் முதன்முதலாக Thefacebook கம்பனிக்கு முதலீடு செய்யப்பட்டது.

 • 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ஒரு மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களை அடைந்தது.

 • 2005 ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதன் மூலம் எக்சல் என்பவர் பேஸ்புக் உடன் பங்குடைமையாலராக இணைந்து கொண்டார்.

 • 2005 ஆம் ஆண்டு ‪ஆகஸ்ட்‬ மாதம் 23 ஆம் திகதி நாம் தற்பொழுது பயன்படுத்தும் www.facebook.com எனும் இணைய முகவரியை 200,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கிக் கொண்டது.

 • 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி பேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. என்றாலும் இதன் போது நண்பர்களை Tag செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கவில்லை.

 • பின்னர் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதி புகைப்படங்களில் நண்பர்களை Tag செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

 • 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி 13 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒருவராலும் தமது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கணக்கொன்றை உருவாக்குவதன் மூலம் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

 • 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மைக்ரோசாப்ட் நிறுவனமானது 240 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பேஸ்புக் இன் 1.6 சதவீத பங்குகளை வாங்கிக் கொண்டது.

 • 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அயர்லாந்தில் இருக்கக்கூடிய டப்ளின் நகரில்பேஸ்புக் இன் சர்வதேச தலைமையகம் அமைக்கப்பட்டது.

 • 2009 ஆம் ஆண்டு அகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி FriendFeed எனும் தளத்தை 47.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் பேஸ்புக் நிறுவனம் தனதாக்கிக் கொண்டது.

 • 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி "@" என்பதை பயன்படுத்தி நண்பர்களை Tag செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது.

 • 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி Divvy-shot எனப்படும் புகைப்படங்களை பகிரும் சேவையை பேஸ்புக் நிறுவனம் தனதாக்கிக் கொண்டது.

 • 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி பேஸ்புக் Community Page வசதி அறிமுகபடுத்தப்பட்டது.

 • 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி பேஸ்புக் தளத்தில் Like மற்றும் Comment செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 • 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி பேஸ்புக் நிறுவனத்தின் மொத்தப் பெறுமதி 50 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

 • 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி பேஸ்புக் இற்கு போட்டியாக கூகுளின் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் துவங்கப்பட்டது.

 • 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி பயனர்களுக்கு மேலும் சிறந்த பயன்களை வழங்கும் நோக்கில் பேஸ்புக் மற்றும் Skype ஆகிய இரு நிறுவனங்களும் கைகோர்த்துக் கொண்டன.


தொடர்புடைய இடுகை: Facebook தந்திரோபாயங்கள் (ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது)
 • 09 August, 2011 ஆம் ஆண்டு அகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி Android மற்றும் iOS பயனர்களுக்கான Messenger செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரம் Black Berry சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கான Messenger செயலி அதே மாதம் 19 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.

 • 2011 ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி தமது நிலைதகவல்களை (Status Update) பகிர்ந்து கொள்வதற்கு 500 எழுத்துக்களை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்ற வரையறை நீக்கப்பட்டு அது 5000 எழுத்துக்கள் வரை அதிகரிக்கப்பட்டது.  பின் அதே மாதம் 30 திகதி 63,206 எழுத்துக்களாக அதிகரிக்கப்பட்டது.

 • 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி Timeline எனும் புதிய இடைமுகத்தை பேஸ்புக் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

 • 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி இணைய இணைப்பு இன்றி SMS முறையில் பேஸ்புக் சேவை பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

 • 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி iPad சாதனங்களுக்கான பேஸ்புக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

 • 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி பேஸ்புக் தளத்தில் விளம்பரங்கள் காட்சிப் படுத்தப்பட்டது.

 • 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி Instagram சேவையை 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில்பேஸ்புக் நிறுவனம் தனதாக்கிக் கொண்டது.

 • 2012 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி பேஸ்புக் நிறுவனம் தனது பங்குளை பகிரங்கமாக விற்பனை செய்ய ஆரம்பித்தது.

 • 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி பேஸ்புக் நிறுவனம் 1 பில்லியன் தொடர்ச்சியான பயனர்களை அடைந்தது.

 • 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி பேஸ்புக் தளத்தில் Graph Search வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.


தொடர்புடைய இடுகை: Facebook தளத்தில் Graph Search வசதியை பயன்படுத்துவது எவ்வாறு?


 • 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி Android சாதனங்களுக்கான பேஸ்புக் செயலியில் Facebook Home எனும் புதிய இடைமுகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 • 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி கணினிப் பயனர்களுக்கான பேஸ்புக் இன் புதிய இடைமுகத்தை அறிமுகப்படுத்தியது.

 • 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி Facebook தளத்தில் ஓட்டுக்களை (Stickers) பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இது ஆரம்பத்தில் iOS சாதனங்களுக்கான செயலியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது பின்னர் கணினிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.

 • 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி பேஸ்புக் தளத்தில் Hash Tag (#) வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

 • 2013 ஆம் ஆண்டு அகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி Samsung, Ericsson, MediaTek, Nokia, Opera, மற்றும் Qualcomm போன்ற நிறுவனங்களுடன் இணைந்து  Internet.org எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. (இது அனைவராலும் மலிவாக இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும்.)

 • 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதிபேஸ்புக் பயனர்களால் பகிரப்பட்ட இடுகைகளையும் (Post) கருத்துரைகளையும் (Comments) Edit செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

 • 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் திகதி  பேஸ்புக் தனது 10 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது. இதன் போது பேஸ்புக் தளத்தில் அனைத்து பயனர்களுக்கும் Look Back எனும் வீடியோ வசதி கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களது பேஸ்புக் மூலமான முன்னைய நடவடிக்கைகளை வீடியோ வடிவில் பார்க்க முடிந்தது.

 • 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பேஸ்புக் நிறுவனமானது வாட்ஸ்அப் சேவையை 19 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் தனதாக்கிக் கொண்டது.

 • 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் பதிவுகளை சேமிப்பதற்கான வசதி அறிமுகபடுத்தப்பட்டது.

 • 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி Facebook Messenger மூலம் நண்பர்களுக்கு பணம் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியது (இந்த வசதி ஆரம்ப கட்டமாக ஐக்கிய அமெரிக்காவில் மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.)

 • 2015 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பேஸ்புக் தளத்தில் அனிமேஷன் படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியை வழங்கியது.


தொடர்புடைய இடுகை: Facebook தளம் மூலம் அனிமேஷன் படங்களை பகிர்ந்து கொள்வது எவ்வாறு?

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top