ஆரம்பத்தில் நாம் வெறும் அழைப்புக்களை மேற்கொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்திய மொபைல் சாதனங்களை இன்று பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள என பயன்படுத்துகின்றோம்.

Gallery Doctor செயலி


இன்றைய ஸ்மார்ட் சாதனங்களானது சிறந்த புகைப்படங்களை எடுக்கும் வகையில் உச்ச தெளிவுத் திறனுடைய கேமராக்களை கொண்டிருப்பதால் நாம் அதன் மூலம் ஏராளமான புகைப்படங்களை பிடிக்கின்றோம், மேலும் அதன் மூலம் இணையத்தை பயன்படுத்த முடியுமாக இருப்பதால் இணையத்தை வலம் வருவதுடன் வீடியோ கோப்புக்கள் புகைப்படங்கள் போன்றவற்றையும் இணையத்தில் இருந்து தரவிறக்குகின்றோம். அது மட்டுமல்லாது வாட்ஸ்அப், வைபர் போன்ற சேவைகளை பயன்படுத்துவதற்கும் எமது ஸ்மார்ட் சாதனங்களையே உபயோகிக்கின்றோம்.இது போன்ற காரணங்களால் எமது ஸ்மார்ட் சாதனத்தில் நிரம்பும் புகைப்படங்கள் எமது ஸ்மார்ட் சாதனத்தின் நினைவகத்தில் பெரும் பகுதியை எடுத்துக் கொள்கின்றது. 

இவ்வாறு நிரம்பும் புகைப்படங்களில் ஏராளமானவைகள் தெளிவற்று காணப்படும், மேலும் சில புகைப்படங்கள் ஒரே தோற்றத்தை கொண்டவைகளாகவும் அமைந்திருக்கும். 

இவ்வாறான புகைப்படங்களை கண்டறிந்து நீக்குவதற்கு உதவுகின்றது Gallery Doctor எனும் Android, iOS சாதனங்களுக்கான செயலி.


Gallery Doctor செயலி இடைமுகம் Gallery Doctor செயலி


இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட் சாதனத்தில் நிறுவி திறந்த பின் உங்கள் Android, iOS சாதனத்தில் தேவையற்ற புகைப்படங்கள் எந்த அளவு உள்ளது, ஒரே தோற்றத்தை கொண்ட புகைப்படங்கள் எந்த அளவு உள்ளது என்பவைகள் தொடர்பான தகவல்களை கண்டறிந்து இது பட்டியல் படுத்துகின்றது.

Gallery Doctor android, ios


இதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் இருக்கும் தேவையற்ற புகைப்படங்களை மிக இலகுவாக நீக்கிக் கொள்ள முடியும்.இந்த செயலி மூலம் தேவையற்ற புகைப்படங்கள் என பட்டியல் படுத்தப்படும் புகைப்படங்கள் பின்வரும் பண்புகளை கொண்டிருக்கும்.


  • அவைகள் தெளிவாக பிடிக்கப்படாத மங்கலான புகைப்படங்கள்
  • இருண்ட நிறத்தில் அமைந்த புகைப்படங்கள் (Dark photos)
  • தரமற்ற புகைப்படங்கள்.


மேலும் இவ்வாறான புகைப்படங்கள் உங்கள் ஸ்மார்ட் சாதனத்தில் அதிகரிக்கும் போதும் ஸ்மார்ட் சாதனத்தின் நினைவகத்தில் பற்றாக்குறை ஏற்படும் போதும் Notification மூலம் அறிந்து கொள்வதற்கான வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.

எனவே உங்கள் Android சாதனத்தில் உள்ள தேவையற்ற புகைப்படங்களை தனித்தனியாக கண்டறிந்து நீக்குவதை விட இந்த செயிலியை பயன்படுத்தி நீக்குவதன் மூலம் சிறந்த பலனை பெற முடிவதுடன் உங்கள் நேரத்தையும் மீதப்படுத்திக் கொள்ளலாம்.


இதனை தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.


Download Gallery Doctor For Android

Download Gallery Doctor For iOS


தொடர்புடைய இடுகை: எமது Android சாதனத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி வேகமாக இயங்க உதவும் இலவச செயலி 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top