Zenfone Max எனும் ஸ்மார்ட் போனை ASUS நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது.


5.5 அங்குல HD திரையை கொண்டுள்ள இது Android 5 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

Asus ஸ்மார்ட் போன்


மேலும் 1.2GHz வேகத்தில் இயங்கும் Quad-core Snapdragon 410 64-bit processor ஐ கொண்டுள்ள இது 2GB RAM ஐ கொண்டுள்ளது.



 8GB/16GB உள்ளக நினைவகங்களை கொண்டுள்ள இதன் நினைவகத்தை microSD card ஐ பயன்படுத்தி 128GB வரை அதிகரித்துக்கொள்ள முடியும்.

இவற்றுடன் 5MP முன்பக்க Camera ஐ கொண்டுள்ள இது 13MP பிரதான Camera ஐ கொண்டுள்ளது.

இவைகள் தவிர 5000mAh திறனுடைய Bettery உடன் அறிமுகப்படுத்தப்படும் இது WiFi, Dual SIM, Bluetooth 4.0, GPS மற்றும் 4G வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது பெரும்பாலும் அக்டோபர் மாதமளவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.



இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Sources: fonearena

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top