அதிகரித்து விட்ட Android சதனங்களுடைய  பாவனையின் காரணமாக ஆண்ட்ராய்டு சாதனத்துக்கு என ஒவ்வொரு நாளும் புதுப்புது செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன 

Microsoft Arrow launcher


அந்த வகையில் மைக்ரோசாப்டிற்கும் "ஆண்ட்ராய்டு மந்திரம்" பிடித்து விட்டதோ என்னவோ ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் அடுத்தடுத்தாக செயலிகளை அறிமுகப்படுத்த துவங்கி உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.Microsoft நிறுவனம் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு என Microsoft OfficeOffice Lens, Cortana மற்றும்  "பாச்சிஎன பல்வேறு செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தி இருக்கும் அதே நேரம் "ஏரோவ் லாஞ்சர்" எனும் செயலியை சோதனை பதிப்பாகவே  (Beta) அறிமுகப்படுத்தி இருந்தது. 


இருப்பினும் தற்பொழுது இந்த செயலியை எந்த ஒருவராலும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இந்த செயலியானது உங்கள் Android சாதனத்துக்கு புதியதொரு தோற்றத்தை தருவதுடன் மேலும் பல வசதிகளையும் தருகின்றது.

வடிவமைப்பும் வசதிகளும்.

இது கிட்டத்தட்ட Yahoo நிறுவனத்தின் Avaite லாஞ்சர் செயலியை ஒத்துக் காணப்படுகின்றது.

மைக்ரோசாப்ட் ஏரோவ் லாஞ்சர் செயலி


அன்றாடம் புதுப்புது பின்புலப் படங்களை தானாகவே இட்டுக் கொள்ளும் வசதியுடன் கூடிய இந்த லாஞ்சர் செயலியானது Home Screen மூலம் வெவ்வேறுபட்ட மூன்று வசதிகளை பெற்றுக் கொள்ள உதவுகின்றது.

  • Home Screen 1 (Who - யார்?)

இதன் Home Screen இன் முதற் பகுதியில் நீங்கள் மிக அண்மையில் தொடர்பு கொண்ட உங்கள் உறவினர்கள் நண்பர்களின் தொடர்பு இலக்கங்கள் தரப்படுவதுடன் அதனை தொடர்ந்து நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தொடர்பு இலக்கங்கள் மின்னஞ்சல் முகவரிகள் போன்றன பட்டியல் படுத்தப்படுகின்றன.

லாஞ்சர் செயலிMicrosoft லாஞ்சர் செயலி


Home Screen 2 (What - என்ன?)

  • அதே போல் Home Screen இன் நடுப்பகுதி நீங்கள் இறுதியாக பயன்படுத்திய செயலி தரப்படுவதுடன் அதனை தொடர்ந்து நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் செயலிகள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.

Home Screen 3 (When - எப்போது?)

  • மேலும் Home Screen இன் மூன்றாம் பகுதியில் நீங்கள் செய்ய வேண்டிய கருமங்களை குறிப்பு எடுத்துக் கொள்ளவும் அவற்றினை உங்களுக்கு ஞாபகம் ஊட்டும் வகையில் Notification வசதியை அமைத்துக்கொள்ளவும் முடியும்.அத்துடன் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் நிருவப்பட்டுள்ள செயலிகளை தேடிப்பெற்றுக் கொள்வதற்கு என இதில் Search வசதியும் தரப்பட்டுள்ளது.

இவைகள் தவிர இன்னும் பல வசதியை தரும் இந்த லாஞ்சர் செயலியானது எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளதுடன் பயன்படுத்துவதற்கும் இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் இதனை உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
தொடர்புடைய இடுகை: Microsoft நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தும் Cortana வசதியை Android சாதனங்களிலும் பயபடுத்திக் கொள்ளலாம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top