Android சாதனங்களின் வருகையின் பின் அதற்கான செயலிகளும் அடுத்தடுத்தாக வந்த வண்ணம் இருக்கின்றன.





அந்த வகையில் இன்றைய எமது ஸ்மார்ட் சாதனங்கள் மூலமாக எமது வெவ்வேறுபட்ட தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள என ஏராளமான செயலிகள் காணப்படுகின்றன.



அவைகள் ஆவணங்களை உருவாக்கவும், புகைப்படங்களை அலங்கரிக்கவும், அன்றாடம் ஏற்படும் சிறிய சிறிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் என பலவேறு வகையில் உதவும் அதே நேரம் சுவாரஷ்யமான விடயங்களுக்கும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு எனவும் உதவுகின்றன.

இதனடிப்படையில் Fake Call எனும் Android சாதனத்துக்கான செயலியானது போலியான அழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.


இதனை சிலர்கள் சுவாரஷ்யமாக பார்த்தாலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல சிலர்கள் இதனை வைத்து தாம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளவும் பயன்படுத்துகின்றனர்.

அதாவது சிலர்களுடன் உரையாடும் போது அந்த உரையாடல் நமக்கு பிடிக்கவில்லை என்றோ அல்லது சலிப்பானது என்றோ நாம் கருதும் போது அந்த இடத்தில் ஒரு போலியான அழைப்பை காரணமாக வைத்து நகருவதற்கும் இந்த செயலி உதவி புரியலாம்.

எது எப்படியோ இலவசமாக Play Store தரவிறக்கிக் கொள்ள முடியுமான இது எமது விருப்பத்திற்கு ஏற்றாட் போல் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றது.

இந்த செயலியின் மூலம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உங்களுக்கு தானகவே அழைப்புக்கள் வரும் வகையில் அமைத்துக்கொள்ள முடியும்.


  • இதில் FAKE A CALL NOW என ஒரு பகுதியும் SCHEDULE FAKE CALL என இன்னும் ஒரு பகுதியும் தரப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் போலி அழைப்புக்களுக்கான செயலி


  •  FAKE A CALL NOW எனும் பகுதி மூலம் உடனடியாகவோ அல்லது 30 செக்கன்களிலோ 1,2,5,10 நிமிடங்களிலோ தானாக அழைப்புக்கள் வரும்வகையில் அமைத்துக்கொள்ள முடியும்.
  •  SCHEDULE FAKE CALL எனும் பகுதி மூலம் நீங்கள் விரும்பும் ஒரு நேரத்தை தெரிவு செய்து அந்த நேரத்தில் அழைப்புக்கள் ஏற்படுத்தப்படுவது போன்று அமைத்துக் கொள்ள முடியும்.

போலி அழைப்புக்களுக்கானAndroid செயலி



  • மேலும் அழைப்புக்கள் வரும் போது ஒலிக்க வேண்டிய Ring Tone மற்றும் தோன்றக்கூடிய புகைப்படங்கள் போன்றவற்றையும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் தெரிவு செய்து கொள்ள முடியும்.
  • அத்துடன் அழைப்பு ஏற்படுத்தப்படும் நபரின் பெயரையும் உங்கள் விருப்பம் போல் உள்ளிடலாம். அதனையும் பராக் ஒபாமா என்றோ அல்லது நரேந்திர மோடி என்றோ உங்கள் விருப்பம் போல் உள்ளிடலாம் என்றால் பாருங்களேன்.

இதனை தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download Fake Call For Android 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top