Android சாதனங்களில் உள்ள Notification panel ஆனது மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

Notification Toggle Android


எமது Android சாதனத்தின் திரையில் மேற்பகுதியில் விரலை வைத்து கீழ் நோக்கி நகர்த்தும் போது தோன்றும் இந்த பகுதி மூலம் நாம் ஏராளமான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.


பொதுவாக இந்த பகுதி மூலம் Wi-Fi, Blouetooth, Data, Screen Rotation, Airplane Mode போன்ற இன்னும் பல வசதிகளை எம்மால் கையாள முடிவதுடன் எமது Android சாதனத்தில் ஏற்படும் பல முக்கிய மாற்றங்களையும் இந்த பகுதி மூலம் அறிந்துகொள்ள முடியும்.

இது போன்ற பல பயன்களை தரும் Notification Panel ஐ மேலும் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள உதவுகின்றது Notification Toggle எனும் Android சாதனத்துக்கான செயலி


எமது Android சாதனத்தின் Notification Panel பகுதியில் Wi-Fi, Blouetooth, Data, Screen Rotation, Airplane Mode போன்றவற்றுடன் இன்னும் சில வரையறுக்கப்பட்ட அம்சங்களையே இணைத்துக் கொள்வதற்கான வசதி எமது Android சாதனத்தில் தரப்பட்டுள்ளது.

இருப்பினும் Notification Toggle எனும் இந்த செயலி தரும் வசதியின் மூலம் பின்வரும் அம்சங்களையும் Notification Panel இல் இணைத்துக்கொள்ள முடியும்.


• WiFi
• Bluetooth
• Sound / Vibration, Sound / Silent, Sound menu
• Brightness mode / menu / 5 predefined stages
• Screen timeout dialog
• Wake lock
• Rotation
• Flight mode
• Mobile data
• NFC
• Sync & Sync now
• WiFi- & USB-Tethering
• Music: previous / next / pause
• WiFi settings / advanced settings
• Bluetooth settings, Bluetooth visbility
• GPS
• Mobile data settings
• Data usage
• Battery
• Camera

மேலே தரப்பட்டுள்ள அம்சங்களில் நீங்கள் நீங்கள் விரும்பும் வசதிகளை தெரிவு செய்து Notification Panel இல் இணைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இவற்றுடன் நீங்கள் விரும்பும் செயலிகளையும் Notification பகுதியில் இணைத்துக் கொள்ளலாம்.

Notification Toggle optionNotification Toggle icon and colours தமிழ்


மேலும் இந்த செயலி மூலம் Notification Panel இல் இணைக்கப்படும் மேற்கூறிய வசதிகளினதும், செயலிகளினதும் iCon இன் நிறத்தினையும், அளவினையும் எமது விருப்பத்திற்கு ஏற்றாட் போல் மாற்றி அமைக்கும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.


இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியானது அதிகமான Android பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.


நீங்களும் இதனை தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download Notification Toggle For Android


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top