உலகத்தினையே ஒரு கிராமமாக இணைக்கும் இணையமானது இன்று ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு கட்டாய தேவையாக ஆகிவிட்டது என்றே கூற வேண்டும்.

இணைய உலகம்


எம்மிடம் கேட்கப்படும்  எந்த கேள்விக்குமான பதிலையும் நாம் எம்முடைய நவீன ஆசானான கூகுளிடம் கேட்டால் போதும் கண்மூடி திறக்கும் முன் பதில் கிடைத்து விடும். இது போன்று நாம் இணையத்தின் ஊடாக ஏராளமான தகவல்களை அறிந்து கொள்கின்றோம் அல்லவா? 


இவ்வாறு தகவல்களை அறிய நீங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியை பயன்படுத்துபவர் எனின் நீங்கள் ஏற்கனவே விஜயம் செய்த இணையப் பக்கங்களை இணைய இணைப்பு இல்லாத போதும் பார்ப்பதற்கு வசதி தரப்பட்டுள்ளது.


என்றாலும் இந்த வசதி கூகுள் குரோம் இணைய உலாவிகளில் செயற்படுத்தப்பட்ட நிலையில் இல்லை.

இந்த வசதியை நீங்களும் உங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியில் செயற்படுத்திக் கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.


  • உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டுள்ள கூகுள் குரோம் இணைய உலாவியை திறந்து கொள்க.
  • பின் அதன் Address Bar இல் chrome://flags என தட்டச்சு செய்க.

Enable chrome offline mode in androidகூகுள் குரோம் Offline வசதி

  • இனி தோன்றும் பக்கத்தில் "Enable show saved copy button" என்பதனை தேடிப்பெருக.
  • பின்னர் அதற்குக் கீழ் தரப்பட்டிருக்கும் Default என்பதை சுட்டுவதன் மூலம் அதனை Enable: Primary என்பதாக மாற்றிக் கொள்க.

கூகுள் குரோம் Flags இடைமுகம் Android கூகுள் குரோம் Offline வசதி செயற்படுத்தப்பட்டுள்ளது.

  • இனி தோன்றும் Relaunch Now எனும் Button ஐ அலுத்துக.

அவ்வளவுதான்.

இனி நீங்கள் விஜயம் செய்த இணையப் பக்கங்களுக்கு இணையம் தொடர்புபடுத்தப்பாடாத போது சென்றால் SHOW SAVED COPY என ஒரு வசதி தோன்றும்.

பிறகென்ன அதனை சுட்டுவதன் மூலம் நீங்கள் ஏற்கனவே விஜயம் செய்த பக்கத்தினை இணைய இணைப்பு இல்லாத போதும் பார்க்கலாம்.நீங்கள் கூகுள் குரோம் இணைய உலாவியை கணினி ஊடாக பயன்படுத்துபவர் எனின் இந்த வசதியை எவ்வாறு செயற்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிய கீழுள்ள பதிவை பார்க்க.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top