வெவ்வேறுபட்ட வர்ணங்களில் அமைந்த அனிமேஷன் விளைவுகளுடன் கூடிய பின்புலப்படங்களை உங்கள் Android சாதனத்துக்கு பின்புலப்படமாக இட்டுக்கொள்ள உதவுகின்றது Minima எனும் Android சாதனத்துக்கான செயலி.


Android Live Wallpaper


இதில் தரப்பட்டுள்ள பின்புலப்படங்களானது  3D விளைவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளதுடன் உங்கள் Android சாதனத்தை நகர்த்தும் போது அதற்கு ஏற்றவாறான அனிமேஷன் விளைவுகளை அவதானிக்க முடியும்.தொடர்புடைய இடுகை: ஒவ்வொரு நாளும் புதுப்புது பின்புலப்படங்களை உங்கள் Android சாதனத்துக்குக்கு நிறுவிக்கொள்ள உதவும் செயலி 

மேலும் இதில் தரப்பட்டுள்ள பின்புலப்படங்களின் நிறங்களை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் அமைத்துக் கொள்ள முடிவதுடன் அவற்றினை நகரும் விளைவுகள் அற்ற சாதாரண ஒரு பின்புலப்படமாக உங்கள் Android சாதனத்தில் சேமித்துக் கொள்வதற்கான வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.

 Minima செயலி. Minima நிற அமைப்பு


இதன் இலவச பதிப்பில் 30 இற்கும் மேற்பட்ட அழகிய பின்புலப்படங்கள் தரப்பட்டுள்ளதுடன் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய Pro பதிப்பில் 90 இற்கும் மேற்பட்ட அழகிய பின்புலப்படங்கள் தரப்பட்டுள்ளன.


வெவ்வேறு வடிவங்களிலும் வெவ்வேறுபட்ட அழகிய வர்ணங்களிலும் அழகிய அனிமேஷன் விளைவுகளை ஏற்படுத்தும் இந்த Live Wallpaper செயலியை நீங்களும் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.Download Minima Live Wallpaper Free

Download Minima Live Wallpaper Proதொடர்புடைய இடுகை: உங்கள் அழகிய Android சாதனத்துக்கு மேலும் அழகு சேர்க்க உதவும் அழகிய ஆறு Icon Packs இலவசமாக

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top