நீங்கள் Android சாதனத்தை புதிதாக வாங்கி பயன்படுத்திய நாட்களில் அது வேகமாக இயங்கியதையும் காலப்போக்கில் அதன் வேகம் படிப்படியாக குறைவடைந்து செல்வதையும் அவதானித்து இருப்பீர்கள் அல்லவா?


Android இலவச செயலி

இது Android சாதனங்களுக்கு மட்டுமல்ல பொதுவாக அனைத்து சாதனங்களிலும் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படவே செய்கின்றன.எனினும் Android சாதனங்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அதில் ஏற்படும் மந்தகதியான செயற்பாட்டை நிவர்த்தி செய்து கொள்ள என ஏராளமான செயலிகள் உதவுகின்றன.


அந்தவகையில் மந்தகதியில் இயங்கும் உங்கள் Android சாதனத்தை வேகமாக இயங்கச் செய்ய என Clean Master, Advanced Mobile Care, Power Cleaner போன்ற பல செயலிகளை எமது முன்னைய பதிவின் மூலம் நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போன்று எமது Android சாதனத்தின் வேகமான செயற்பாட்டுக்கு Systweak Android Cleaner எனும் செயலியும் உதவுகின்றது.


Systweak Android Cleaner இடைமுகம்


  • எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இந்த செயலியானது உங்கள் Android சாதனத்தின் RAM நினைவகத்தை தேவை இன்றி பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலிகளினது செயற்பாட்டை முடக்குவதுடன் உங்கள் Android சாதனத்தில் சேமிக்கப்படக்கூடிய தேவையற்ற கோப்புக்களையும் இனங்கண்டு நீக்கி விடுகின்றது.


தொடர்புடைய இடுகை: உங்கள் Android Smart சாதனம் மிக வேகமாக இயங்குவதற்கு துணை புரியும் இலவச செயலி 


Systweak Android Cleaner இடப்பகிர்வு


  • இதில் தரப்பட்டுள்ள Storage Manager எனும் பகுதியின் ஊடாக உங்கள் Android சாதனத்தில் எந்த அளவு, எத்தனை புகைப்படங்கள் உள்ளன, வீடியோ கோப்புக்கள் உள்ளன, ஆவணங்கள் உள்ளன என்பது போன்ற தகவல்களை தனித் தனியே பெற்றுக்கொள்ள முடியும்.


Systweak Android Cleaner செயலிகள் நிர்வகிக்கும் இடைமுகம்  • இதில் தரப்பட்டுள்ள App manager எனும் பகுதியின் ஊடாக உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை நீக்கிக் கொள்ளவும் அவற்றினை Backup எடுத்து பிறகொரு சந்தர்பத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.  • உங்கள் Android சாதனத்தின் Battery ஐ சேமிப்பதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.தொடர்புடைய இடுகை: உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் அருமையான செயலி


  • இந்த செயலியின் Settings பகுதியின் ஊடாக 2,4,6 அல்லது 8 மணித்தியாலத்துக்கு ஒரு தடவை உங்கள் Android சாதனம் தானாகவே பராமரித்துக் கொள்ளும் படி அமைக்கவும் முடியும்.


நீங்களும் இதனை தரவிறக்கி உங்கள் Android சாதனத்தில் பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.Download Systweak Android Cleaner

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top