Sony நிறுவனம் உத்தியோகபூர்வமாக இரண்டு ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.


Xperia C5 Ultra மொபைல்


Sony Xperia M5 மற்றும் Sony Xperia C5 ஆகிய சாதனங்களே அவைகளாகும்.


Sony அறிமுகப்படுத்திய Sony Xperia M5 ஸ்மார்ட் போன் தொடர்பான விபரக்குறிப்புகளை நாம் ஏற்கனவே எமது முன்னைய பதிவு மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.
  • இதன் அடுத்த சாதனமான Sony Xperia C5 ஸ்மார்ட் போன் ஆனது 6 அங்குல திரையை கொண்டுள்ளது.
  • இது Android 5.0 இயங்குதளத்தை கொண்டு இயங்கும் அதேவேளை 1.7 GHz வேகத்தில் இயங்கக்கூடிய 64-bit Octacore Processor ஐயும் தன்னகமாக கொண்டுள்ளது.
  • 2GB RAM மற்றும் 16GB நினைவகத்தினை கொண்டுள்ள இதன் நினைவகத்தினை microSD ஐ பயன்படுத்தி மேலும் 200GB ஆல் அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.
  • இது சிறந்த தெளிவுத்திறன் கொண்ட Selfie புகைப்படங்களை பிடிக்கும் வகையில் Flash வசதியுடன் கூடிய 13 Megapixel முன்பக்க Camera ஐ இது கொண்டுள்ளது.  இதன் பிரதான Camera உம் 13 megapixel தெளிவுத்திறனை கொண்டுள்ளது.
  • 2930 mAh வலுவுடைய மின் கலத்தினையும் இது தன்னகமாக கொண்டுள்ளது.



இந்த மாதம் இறுதிப்பகுதியில் விற்பனைக்கு வர உள்ளது இதன் விலை தொடர்பில் எதுவித தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.


Sources: Sony

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top