ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இன்றைய தொடர்பாடல் சாதனங்களானது பெரிதும் உதவுகின்றது.

ஸ்மார்ட் போன்


தமது தனிப்பட்ட தகவல்கள், வணிக ரீதியான தகவல்கள், உறவினர்கள் நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்கள் என பல தேவைகாளுக்காகவும் நாம் தொடர்பாடல் சாதனங்களை பயன்படுத்துகின்றோம்.


ஆரம்பத்தில் சில முக்கிய தேவைகளுக்கு மாத்திரமே தொடர்பாடல் சாதனங்களை நாடிய நாம் இன்று காலை சிற்றுண்டி வரவழைப்பதில் இருந்து நமது அத்தனை தேவைகளுக்கும் இதனையே பயன்படுத்துகின்றோம்.

இதற்கு என தொலைபேசிகள் முக்கிய பங்களிப்பை செலுத்தினாலும் அவைகள் மூலம் எமக்கு ஏற்படுத்தப்படும் அதிகரித்த அழைப்புக்கள் காரணமாக அது எமக்கு தொல்லைபேசியாக அமைந்து விடும் சந்தர்பங்களும் உண்டு.

எனவே எமது ஓய்வு நேரங்களில் தேவையற்ற அழைப்புக்களை தவிர்த்து சில முக்கிய அழைப்புக்களை மாத்திரம் அறிந்து கொள்ள உதவுகின்றது Sleep peacefully எனும் Android சாதனத்துக்கான செயலி.

நீங்கள் ஒரு ஆட்டோ சாரதியை போன்று, அல்லது நீங்கள் ஒரு போலீஸ் காரரை போன்று அல்லது வைத்தியரை போன்று எப்பொழுதும் உங்கள் தொலைபேசியை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளவர் எனின் உங்களுக்கு இந்த செயலி பெரிதும் உதவியாக அமையும்.

  • அதாவது நீங்கள் இரவு எத்தனை மணியில் இருந்து காலை எத்தனை மணி வரையில் நித்திரைக்கு செல்வீர்களோ அந்த நேரத்தினை இந்த செயலியில் உள்ளிட வேண்டும்.

Sleep peacefully Android செயலி

  • பின் அந்த நேர இடைவெளியில் உங்கள் Android சாதனம் தானாகவே Silent நிலைக்கு அமைக்கப்படும். எனவே உங்களுக்கு ஏற்படுத்தப்படக்கூடிய அழைப்புக்களாலோ, உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளாலோ எவ்வித ஒளியும் எழுப்பப்பட மாட்டாது.


  • எனினும் உங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தியவருக்கு இந்த செயலியில் இருந்து பின்வருமாறு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

நிம்மதியாக உறங்க உதவும் செயலி

My phone is in silent, If it is important, send SMS with one word saying Urgent & my phone will alert me.

இதன் தமிழாக்கம் பின்வருமாறு...............

"எனது தொலைபேசி Silent நிலையில் உள்ளது, முக்கிய தேவை எனின் Urgent என மறு மொழி அனுப்பவும். இதன் மூலம் அது எனக்கு அறியப்படுத்தப்படும்"


  • இவ்வாறு உங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தியவருக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படும். எனவே உங்களை தொடர்பு கொண்டவர் முக்கியமான ஒரு விடயத்துக்கு உங்களை தொடர்பு கொண்டிருந்தால் அவர் Urgent என உங்களுக்கு மறுமொழி அனுப்புவார்.

உறங்க ஒரு செயலி


  • அவ்வாறு Urgent  என மறுமொழி உங்களுக்கு கிடைக்கப்பெற்றால் உங்கள் ஸ்மார்ட் போனின் மூலம் எழுப்பப்படும் சத்தத்தின் மூலம் உங்களுக்கு அவசர தேவைக்காக அழைப்பை ஏற்படுத்திய நபரை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.


இதனால் தேவையற்ற அழைப்புக்கள் தவிர்க்கப்பட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்.


மேலும் இந்த வசதி வாரத்தில் எந்த எந்த நாட்களில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் அமைத்துக் கொள்ள முடியும்.


இதனை தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.தொடர்புடைய இடுகை: அடிக்கடி ஞாபக மறதியா? அப்படியாயின் தீர்வை தருகின்றது Android சாதனத்துகான செயலி

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top