இன்று அதிகமானவர்கள் இணையத்தை உலா வருவதற்கு தமது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.


Android ஸ்மார்ட் சாதனம் இணையம்


அவ்வாறு பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் சாதனங்களுள் Android ஸ்மார்ட் சாதனங்கள் இன்று பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றது.நீங்களும் Android சாதனத்தை பயன்படுத்தும் அதேவேளை அதன் மூலம் இணையத்தையும் பயன்படுத்துபவர் எனின் Android சாதனத்தில் உள்ள பின்வரும் வசதியை அறிந்து வைத்திருப்பது உங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

பொதுவாக நாம் எமது Android ஸ்மார்ட் சாதனத்தின் மூலம் இணையத்தினை பயன்படுத்தும் போது Mobile data என்பதை செயற்படுத்தியதன் பின்னரே பயன்படுத்துகின்றோம்.

இவ்வாறு எமது Android சாதனம் இணையத்துடன் தொடர்புபடத் துவங்கியதுடன் எமது சாதனத்தில் உள்ள ஏராளமான செயலிகள் இணையத்துடன் தொடர்புபடுகின்றன. இதன் காரணமாக அவற்றுக்கான தரவுகளும் எவ்வித தடையும் இன்றி எம்மை அறியாமலலேயே தரவிறக்கப்பட்டு விடுகின்றன.


உதாரணத்திற்கு நாம் இணையத்தை எமது Android சாதனத்துடன் தொடர்புபடுத்தியதன் பின் Viber, Whatsapp, Facebook போன்ற இன்னும் ஏராளமான செயலிகள் இணையத்துடன் தொடர்புபட்டு அவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எமக்கு Notification ஆக அறியத்தருவதனை அவதானித்து இருப்பீர்கள்.

தொடர்புடைய இடுகை: Android சாதனத்தில் குறிப்பிட்ட ஒரு செயலியில் இருந்து தோன்றும் Notification ஐ நிறுத்துவது எப்படி?


இது போன்ற சந்தர்பங்களில் எமது இணையப்பாவனை அதிகரிக்கும் அதேநேரம் Android சாதனத்தின் Battery உம் விரைவில் தீர்ந்து விடுகின்றது.

எனவே இதுபோன்று தேவையற்ற விதத்தில் செயலிகள் இணையத்துடன் தொடர்புபடுவதை தவிர்ப்பதற்கான வசதி எமது Android சாதனத்தில் தரப்பட்டுள்ளது.


தொடர்புடைய இடுகை: தரவுப் பாவனையை 50 சதவீதம் வரை குறைக்க உதவுகின்றது Opera Max எனும் Android சாதனத்துக்கான செயலி 

இந்த வசதியை செயற்படுத்திக் கொள்வதன் மூலம்....................

  • செயலிகள் தானாக இணையத்துடன் தொடர்புபடுவது தடுக்கப்படுவதால் வீணே விரயமாகும் இணையப் பாவனையை கட்டுப்படுத்தலாம்.
  • Battery இன் சக்தியை சேமித்துக் கொள்ளலாம்.

என்றாலும் இந்த வசதி செயற்படுத்தப் பட்டிருக்கும் போது....................

  • உங்களால் இணையத்தை உலா வரக்கூடியதாக இருக்கும் ஆனாலும் Play Store இல் இருந்து செயலிகளை தரவிறக்க முடியாது.
  • வீடியோ கோப்புக்களை இயக்க முடியாது.

நீங்களும் இந்த வசதியை செயற்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.


  • உங்கள் Android சாதனத்தின் settings பகுதிக்கு செல்க.

Android settings data usage  • பின் Connection ===> Data Usage என்பதை தெரிவு செய்க.

Android Restrict Background Data

  • பின் Menu Button ஐ அழுத்தும் போது தோன்றும் சாளரத்தில் Restrict Background Data என்பதை தெரிவு செய்க அவ்வளவு தான்.

இனி உங்கள் இணையப்பாவனை கட்டுப்படுத்தப்படும். 


இதனை குறிப்பிட்ட ஒரு செயலிக்கும் செயற்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு செயற்படுத்துவதன் மூலம் அந்த செயலி பின்புலத்தில் இணையத்துடன் தொடர்புபடுவதை தடை செய்யலாம்.


  • இதற்கு மேற்குறிப்பிட்ட வகையில் Connection ====> Data Usage பகுதிக்கு செல்க.


இணையத்துடன் தொடர்புபடும் செயலிகளின் பட்டியல்


  • அதில் இணையத்துடன் தொடர்புபடும் அனைத்து செயலிகளும் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும். 


Android சாதனத்தில் குறிப்பிட்ட ஒரு செயலி இணையத்துடன் தொடர்பு படுவதை கட்டுப்படுத்துதல்


  • இனி அதனை தெரிவு செய்யும் போது தோன்றும் சாளரத்தின் கீழ் பகுதியில் தரப்பட்டுள்ள Restrict Background Data என்பதை Tick செய்வதன் மூலம் குறிப்பிட்ட செயலி தானாக இணையத்துடன் தொடர்புபடுவதை தடை செய்து கொள்ளலாம்.


தொடர்புடைய இடுகை: பயன்படுத்தப்பட்டுள்ள Call, SMS, Data Usage போன்றவற்றினை புள்ளி விபர அடிப்படையில் அறிய உதவும் Android செயலி 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top