இன்று எமது ஆண்ட்ராய்டு சாதனத்தின் மூலமாக எத்தனையோ வகையான கோப்புக்களை நாம் கையாளுகிறோம் அல்லவா?

ஸ்மார்ட் போன் பாதுகாப்பு


அதாவது ஆரம்பத்தில் கணினி மூலமோ அல்லது தொலைக்காட்சி மூலமோ பார்த்து வந்த திரைப்படங்கள், அல்லது ஏனைய வீடியோ கோப்புக்களை இன்று எமது கைக்குள் அடங்கி இருக்கும் ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் பார்க்கின்றோம்.அது மட்டும் அல்லாது நாம் எமது உறவினர்கள் நண்பர்களுடன் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் ஏனைய எமது தனிப்பட்ட தகவல்கள் ஆவணங்கள் என அத்தனையும் இந்த ஸ்மார்ட் சாதனங்களுக்குள் இன்று புகுந்து விட்டது.

எனவே கணினியை போல் அல்லது ஸ்மார்ட் சாதனங்களானது ஒருவர் கையில் இருந்து இன்னுமொருவரின் மிக இலகுவாக தாவி விடுவதால் எமது தனிப்பட்ட தகவல்களை ஏனையவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

எனவே நாம் எமது ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், ஆவணங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்களுக்கு கடவுச்சொல் ஒன்றை உள்ளிட்டுக் கொள்வதன் மூலம் அவைகளை ஏனையவர்களது கண்களில் படாதவாறு பாதுகாத்துக் கொள்ள முடியும்.


இந்த செயற்பாட்டை செய்து கொள்ள உங்களுக்கு உதவுகின்றது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான ES File Explorer செயலி.இது ஆண்ட்ராய்டு சாதங்களில் பயன்படுத்தப்பட்டும் மிகவும் பிரபலமான ஒரு மூன்றாம் நபர் பைல் எக்ஸ்ப்ளோரர் செயலியாகும்.

இதன் மூலம் ஏராளமான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.தொடர்புடைய இடுகை: எனவே நீங்களும் இதனை பயன்படுத்தி உங்கள் கோப்புக்களுக்கு கடவுச்சொல் இட்டு பாதுகாக்க விரும்பினால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.

  • பின் நீங்கள் கடவுச்சொல் இட்டு பாதுகாக்க வேண்டிய கோப்பினை (File) ES File Explorer செயலி மூலமாக பெருக.
  • இனி அந்த கோப்பினை தொடர்ச்சியாக அலுத்துக. (Tap And Hold) இதன் போது அந்த கோப்பு Tick செய்யப் படுவதனை அவதானிப்பீர்கள்.

android இல் கடவுச்சொல் இட்டு பாதுகாக்க கோப்புக்களுக்கு கடவுச்சொல் இட Android

  • பின்னர் ES File Explorer இன் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகள் கொண்ட பகுதியை சுட்டுக.
  • இதன் போது தோன்றும் சாளரத்தில் Encrypt என்பதனை சுட்டுக.
  • இனி உங்களுக்கு கடவுச்சொல் இடுவதற்கான சாளரம் தோன்றும். அதில் உங்களால் இலகுவில் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியுமான கடவுச்சொல் ஒன்றை உள்ளிட்டு OK என்பதனை அலுத்துக. (இந்த சாளரத்தில் தோன்றும் Encrypt File Name என்பதில் Tick செய்வதன் ஊடாக குறிப்பிட்ட கோப்பின் பெயர் என்ன என்பதை அறிய முடியாதவாறு Rename செய்து கொள்ளவும் முடியும்.)
ES எக்ஸ்ப்ளோரர் மூலம் கடவுச்சொல் இடல்

அவ்வளவு தான்.

இனி குறிப்பிட்ட கோப்பு கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டு விட்டது.


பின்னர் அதனை திறந்து கொள்ள வேண்டும் எனில் மேற்குறிப்பிட்ட முறையில் அதனை தெரிவு செய்து Decrypt என்பதனை சுட்ட வரும் சாளரத்தில் கடவுச் சொல்லினை உள்ளிடுவதன் மூலம் அதனை திறந்து கொள்ளலாம்.

பின்னர் அவ்வாறு கடவுச்சொல் இடப்பட்ட கோப்புக்களை எந்த ஒருவருடனும் பகிர்ந்துகொள்ள முடியும். எனினும் அதனை அவர் திறந்து பயன்படுத்த வேண்டும் எனின் நீங்கள் உள்ளிட்ட கடவுச்சொல்லை அவர் அறிந்திருக்க வேண்டும்.

ES எக்ஸ்ப்ளோரர் இல் கடவுச்சொல் அகற்றல்


மேலதிக தகவல்:
குறிப்பிட்ட ஒரு கோப்புறையில் உள்ள அனைத்து கோப்புக்களுக்கும் கடவுச்சொல் இட விரும்பினால் ஒவ்வொரு கோப்பினையும் தனித்தனியாக தெரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை மாறாக குறிப்பிட்ட கோப்பினை தெரிவு செய்து Encrypt செய்வதன் மூலம் அந்த கோப்புறையில் உள்ள அனைத்து கோப்புக்களுக்கும் கடவுச்சொல் இட்டு பாதுகாக்கலாம்.

கவனத்திற்கு:
உங்களால் இலகுவில் ஞாபகப் படுத்திக் கொள்ள முடியுமான கடவுச் சொற்களை பயன்படுத்துங்கள்.Image Credit: securitybox

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top