இன்றைய உலகில் அன்றாடம் அறிமுகப்படுத்தப்படும் புதுப்புது தொழில்நுட்ப சாதனங்களானது சந்தையை அலங்கரித்த வண்ணம் உள்ளது.

Productchart இணையம்


வாடிக்கையாளர்களின் வெவ்வேறுபட்ட தேவைகள், விருப்பங்களை அறிந்து கொண்ட நிறுவனங்கள் அவர்களது தேவை விருப்பங்களை பூர்த்தி செய்ய முனைந்ததன் விளைவாக இன்று குறிப்பிட்ட ஒரு சாதனம் தொடர்பான பல்வேறு தெரிவுகளை சந்தையில் காண முடிகிறது.


இவ்வாறு அதிகரித்துக் காணப்படும் தெரிவுகளால் வாடிக்கையாளர்கள் தமது தேவை, விருப்பத்திற்கு ஏற்ற சாதனங்களை இனங்கண்டு கொள்ள முடிந்தாலும் அதனை ஒத்த இன்னும் பல தயாரிப்புக்கள் சந்தையில் இருக்கவே செய்கின்றது.

எனவே நாம் எதிர்பார்க்கும் வசதிகளுடன் கையில் இருக்கும் பணத்திற்கும் ஏற்றவாறான மிகவும் பொருத்தமான சாதனங்களை  தெரிவு செய்து கொள்ள உதவுகின்றது Productchart எனும் இணையதளம்.


இந்த தளத்தில் ஸ்மார்ட் போன்கள், மடிக் கணினிகள், Tablet சாதனங்கள், USB Flash Drive சாதனங்கள், SSD நினைவகங்கள், 3D Printers போன்றவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


இதில் நீங்கள் எவ்வாறான சாதனத்தை எதிர்பார்க்கின்றீர்களோ  அதனை தெரிவு செய்த பின் அவற்றில் எவ்வாறான வசதிகள் இருக்க வேண்டும் என்பதனை தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்கு பொருத்தமான சாதனங்கள் இந்த தளத்தில் பட்டியல் படுத்தப்படும்.

Productchart web


உதாரணத்திற்கு உங்கள் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் ஒரு ஸ்மார்ட் போனை இந்த தளத்தின் மூலம் தெரிவு செய்து கொள்ள முற்படும் போது அந்த ஸ்மார்ட் போன் தொடர்பான பின்வரும் வசதிகளை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் தெரிவு செய்யலாம்.

 • நீங்கள் எதிர்பார்க்கும் ஸ்மார்ட் போன் எந்த நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்க வேண்டும்.
 • அதன் திரை எந்த அளவில் இருக்க வேண்டும்.
 • அதன் Screen Resolution எவ்வளவாக இருக்க வேண்டும்.
 • அதன் நினைவகம் எந்த அளவு இருக்க வேண்டும்.
 • அது SD Card பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டுமா?
 • அதில் இரண்டு SIM அட்டைகளை பயன்படுத்தும் வசதி இருக்க வேண்டுமா?
 • அதன் RAM எந்த அளவு இருக்க வேண்டும்.
 • அதன் Battery இன் திறன் எந்த அளவு இருக்க வேண்டும்.
 • அது எந்த இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
 • அதன் நிறை எத்தனை கிராம்களுக்குள் இருக்க வேண்டும்.
 • அதன் விலை எவ்வளவாக அமைய வேண்டும்?

எனவே நீங்கள் ஒரு ஸ்மார்ட் போனை தெரிவு செய்யும் போது குறிப்பிட்ட ஸ்மார்ட்  போன் தொடர்பான மேற்குறிப்பிட்ட வசதிகளை தெரிவு செய்யும் வசதி இந்த தளத்தில் தரப்பட்டுள்ளது.


மேற்குறிப்பிட்ட வசதிகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் தெரிவு செய்த பின் உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஸ்மார்ட் போன் ஒன்றை உங்களால் தெரிவு செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.


இது போல் மடிக் கணினிகள், Tablet சாதனங்கள், USB Flash Drive சாதனங்கள், SSD நினைவகங்கள், 3D Printers போன்றவைகளையும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றாட் போல் தெரிவு செய்து கொள்ளும் வசதி இதில் தரப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளமானது ஸ்மார்ட் சாதனங்களிலும் சிறப்பாக இயங்குகிறது.

Productchart மொபைல் தளம் Productchart on mobile

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Productchart

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top