Picsart எனும் Android சாதனத்துக்கான செயலியானது உங்கள் புகைப்படங்களை மெருகூட்டிக் கொள்ள என அருமையான வசதிகளை தருகின்றது.

Picsart Android செயலி


இதற்கு முன் உங்கள் புகைப்படங்களை ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் மெருகூட்டிக் கொள்ள என  PhotoGrid, Snapseed, போன்ற சிறந்த வசதிகளை தரக்கூடிய செயலிகளை நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.


அதே போல் சிறந்த வசதிகளை தரக்கூடியதும் உலகளாவிய ரீதியில் 250 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தக் கூடியதுமான ஒரு Photo Editor செயலியே இந்த Picsart எனும் செயலியும் ஆகும்.


இந்த செயலியில் தரப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களுக்கு நூற்றுக்கணக்கான விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.


  • உங்களுடைய புகைப்படத்துடன் உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் பலரது புகைப்படங்களின் தொகுப்பை அழகாகவும் வெவ்வேறு அளவுகளிலும் வெவ்வேறு கோணங்களிலும் ஒரு புகைப்படமாக உருவாக்கிக் கொள்ளலாம்.

Picsart ANDROID செயலி


  • மேலும் கணினியில் நாம் பயன்படுத்தும் Photoshop மென்பொருளில் தரப்பட்டுள்ள வசதிகளுக்கு ஈடான பல வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளது. 

Picsart இடைமுகம்

  • அத்துடன் அழகிய எழுத்துருக்களில் நீங்கள் விரும்பும் வாசகங்களை இதில் இணைத்துக்கொள்ள முடிவதுடன் பல சுவாரஷ்யமான ஓட்டுக்களையும் உங்கள் புகைப்படத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.

Picsart புகைப்படம் அலங்கரித்தல்


  • அத்துடன் இந்த செயலியில் தரப்பட்டுள்ள Camera ஆனது புகைப்படங்களுக்கு உடனுக்குடன் விளைவுகளை ஏற்படுத்தி புகைப்படங்களை பிடிப்பதற்கான வசதியையும் கொண்டுள்ளது.
  • மேலும் இதன் மூலம் நீங்கள் அலங்கரிக்கும் உங்கள் புகைப்படங்களை இந்த செயலியின் ஊடாகவே இன்னுமொருவருக்கு மின்னஞ்சல் செய்து கொள்ள முடிவதுடன் அதனை Facebook, Twitter, Instagram, Dropbox மற்றும் WhatsApp போன்ற சேவைகளின் ஊடாக உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து மகிழவும் முடியும்.


மேலும் இந்த செயலியை iPhone, iPad போன்ற iOS சாதனங்களிலும் Android சாதனங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடிவதுடன் Windows Phone இயங்குதளங்களை கொண்ட சாதனங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் நீங்கள் விண்டோஸ் 8/8.1 மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளங்களை பயன்படுத்துபவர் எனின் அதற்கான Universal Application உம் தரப்பட்டுள்ளது.


இவற்றினை பின்வரும் இணைப்புகள் மூலம் நீங்களும் தரவிறக்கிக் கொள்ளலாம்.


Download Pics art For Android

Download Pics art For iOS

Download Pics art For Windows Phone

Download Pics art From Windows Store

Download Pics art From Amazon Store



தொடர்புடைய இடுகை: 30 இற்கும் மேற்பட்ட அழகிய விளைவுகளை ஏற்படுத்தி உங்கள் புகைப்படங்களை அலங்கரிக்க உதவும் ஒரு இணையதளம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top