இன்றைய சமூக வலைதளங்களின் பாரிய வளர்ச்சியின் காரணமாக ஒருவர் இன்னும் ஒருவரை நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொள்ளும் முறை மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது.

 Photo Grid Android செயலி


அது மாத்திரம் இன்றி ஒரு சில தசாப்தங்களுக்கு முன் ஒருவர் நம்மை விட்டு பிரிந்து தூர இடங்களுக்கு சென்று விட்டால் அவரை எமக்கு காணக் கிடைப்பதோ மிகவும் அரிது.


இருப்பினும் இன்று நாம் எமது முகநூல் கணக்கிற்குள் நுழைந்து விட்டால் போதும் அதன் மூலம் நமக்கு காணக் கிடைக்காத ஒருவர் இல்லை என்றே கூற வேண்டும்.

அந்த வகையில் இன்று ஒவ்வொருவரும் தமது கைக்குள் அடங்கி இருக்கும் ஆனால் உலகத்தையே தன்வசம் வைத்திருக்கும் ஸ்மார்ட் சாதனங்கள் மூலமாக தத்தமது புகைப்படங்களை பிடித்து இணையத்தில் உலாவ விடுகின்றனர்.

இதனை பார்க்கும் உறவினர்கள் நண்பர்கள் Like, Comment, Share செய்து கொள்வது இன்றைய வழக்கம் ஆகி விட்டது.

எது எப்படியோ நாம் எமது ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் பிடிக்கப்பட்ட எமது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நேரடியாக பகிர்வதை விட அவற்றினை Photo Editing செயலிகளின் உதவியுடன் அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி பகிர்வதன் மூலம் அவைகள் பார்ப்பதற்கு மேலும் அழகானதாக இருக்கும்.

அந்த வகையில் உங்கள் புகைபடங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்ள என நாம் Snapseed எனும் ஒரு செயலியை ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அது போன்ற இன்னும் பல வசதிகளை தருகின்றது Photo Grid எனும் ஸ்மார்ட் சாதனங்களுக்கான செயலி.

இது உங்கள் புகைப்படங்களுக்கு அழகிய விளைவுகளை ஏற்படுத்தி அவற்றினை மெருகூட்டிக் கொள்ள உதவுவது மாத்திரம் இன்றி உங்கள் புகைப்படங்கள் அழகிய விளைவுகளை ஏற்படுத்தியவாறு தோன்றக்கூடிய வீடியோ கோப்புக்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மேலும் அவற்றுக்கு பின்னணி இசைகள் அல்லது பாடல்களை வழங்க முடியும் என்பது இன்னும் சிறப்பான விடயம் அல்லவா?


Android  PhotoGrid வீடியோ  Android photo editor செயலி


இவற்றுடன் இந்த செயலியில் தரப்பட்டுள்ள Selfie Camera மூலம் வெவ்வேறு வர்ணங்களிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தியும் உங்களை நீங்களே புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும்.


மேலும் இதில் தரப்பட்டுள்ள Scrapbook/Pin Board எனும் வசதி மூலம் நீங்கள் விரும்பும் புகைப்படங்களை ஒரே புகைப்படத்தில் இணைத்துக் கொள்ளவும் அவற்றுக்கு அழகிய பின்புலப்படங்களை வழங்கவும் முடிவதுடன் அவற்றுடன் எழுத்துக்கள் மற்றும் ஓட்டுகள் (Stickers) போன்றவைகளை இணைத்து மேலும் அலங்கரித்துக்கொள்ள முடியும்.


Android EditorPhoto editor மொபைல்


மேலும் இதன் மூலம் நீங்கள் உங்கள் புகைப்படங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது உங்கள் புகைப்படங்களை அலங்கரிக்க என இதில் 50 இற்கும் மேற்பட்ட விளைவுகள் தரப்பட்டிருப்பதுடன் 500 இற்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் (stickers) தரப்பட்டுள்ளன.

இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை மெருகூட்டும் போது உங்களது முகத்தில் இருக்கும் தழும்புகளை நீக்க முடிவதுடன் அவற்றிற்கு மேலும் சிவப்பழகை சேர்க்கவும் முடியும்.

இவைகள் மாத்திரம் அல்லாது இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை Android, iOS மற்றும் Windows Phone சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்களும் இதனை உங்கள் சாதனத்தில் நிறுவி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download PhotoGrid For Android

Download PhotoGrid For iOS

Download PhotoGrid For Windows Phone


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top