இன்றைய ஸ்மார்ட் சாதனங்களானது பல அற்புதமான வசதிகள் உட்புகுத்தப்பட்ட ஒரு கையடக்க சாதனமாக உருவெடுத்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.


அவ்வாறு நவீன வசதிகள் உட்புகுத்தப்பட்ட ஸ்மார்ட் சாதனங்களானது விலையிலும் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.


ஸ்மார்ட் சாதனம்


அவ்வாறு நாம் அதிக கட்டணம் செலுத்தி வாங்கிய எமது பெறுமதியான ஸ்மார்ட் சாதனங்களை நாம் எவ்வளவுதான் கண்போல் பாதுகாத்து வந்தாலும் கவனம் இன்றி இருக்கும் ஒரு நொடியும் போதுமானது எமது ஸ்மார்ட் சாதனம் தொலைந்து விடுவதற்கு.எனவே தொலைந்து விட்ட எமது ஸ்மார்ட் சாதனங்களை கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் இருந்தாலும் அது தொலைந்து விட முன் அதனை பாதுகாப்பதே புத்திசாலித்தனமானது.

அந்த வகையில் எமது ஸ்மார்ட் சாதனம் தொலைந்து விட முன் அதனை பாதுகத்துக் கொள்ள  என சிறந்த வசதிகளை தருகின்றது Mobile Alarm System எனும் Android சாதனத்துக்கான செயலி.


Android Mobile Alarm System செயலி


இந்த செயலியில் இரு வேறு பதிப்புக்கள் தரப்பட்டுள்ளது இதில் Mobile Alarm System Lite எனும் செயலியை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடிவதுடன் Mobile Alarm System எனும் செயலியை கட்டணம் செலுத்தியே பயன்படுத்த வேண்டும்.

எனினும் ஒரு ஸ்மார்ட் சாதனம் தொலைந்து விடுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இதன் இலவச பதிப்பில் தரப்பட்டுள்ள வசதிகளே போதுமானது.


உங்கள் Android சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள சில உணர்வு நிலைகளின் எல்லைகள் மீறப்படும் போது  இந்த செயலியின் மூலம் ஏற்படுத்தப்படும் பலமான சத்தமானது குறிப்பிட்ட Android சாதனம் தொலைந்து விடுவதில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கின்றது.


  • இந்த செயலியில் தரப்பட்டுள்ள Movement எனும் வசதியை செயற்படுத்திய நிலையில் உங்கள் ஸ்மார்ட் சாதனத்தை குறிப்பிட்ட ஒரு இடத்தில் நீங்கள் வைத்து விட்டால் குறிப்பிட்ட இடத்தில் இருந்து உங்கள் ஸ்மார்ட் சாதனம் நகர்த்தப்படும் போது குறிப்பிட்ட செயலியின் மூலம் பலமான சத்தம் ஏற்படுத்தப்படும் இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் சாதனம் யாரோ ஒருவரால் நகர்த்தப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம். (இந்த வசதி கட்டணம் செலுத்தி பெறப்படும் பதிப்பிற்கு மாத்திரம்.)

  • இந்த செயலியில் தரப்பட்டுள்ள Proximity எனும் வசதி செயற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் உங்கள் ஸ்மார்ட் சாதனத்துக்கு அருகில் எதுவும் ஊசலாடினாலும் கூட அதனை உங்களுக்கு அறியப்படுத்தும் வகையில் இந்த செயலியின் மூலம் பலத்த சத்தம் ஏற்படுத்தப்படும்.


தொடர்புடைய இடுகை: தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டு கணணியை இயக்க முயற்சிப்பவரை படம்பிடித்து காட்டும் அருமையான மென்பொருள்.


  • அதே போன்று உங்கள் ஸ்மார்ட் சாதனமானது மின்னேற்றியுடன் (Charger) இணைக்கப்பட்டுள்ள போது இந்த செயலியில் தரப்பட்டுள்ள Unplug எனும் வசதியை செயற்படுத்திய நிலையில் இருந்தால் உங்கள் Android சாதனம் மின்னேற்றியில் இருந்து நீக்கப்படும் போது குறிப்பிட்ட செயலியின் மூலம் பலமான சத்தம் ஏற்படுத்தப்படும் இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் சாதனத்தில் இன்னும் ஒருவர் கையை வைத்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

  • மேலும் இந்த செயலியில் தரப்பட்டுள்ள Unlock எனும் வசதி செயற்படுத்திய நிலையில் இருந்தால் Lock செய்யப்பட்டிருக்கும் உங்கள் Android சாதனம் Unlock செய்யப்படும் போது குறிப்பிட்ட செயலியின் மூலம் பலமான சத்தம் ஏற்படுத்தப்படும் இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் சாதனம் இன்னும் ஒருவரின் கையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

  • அத்துடன் இந்த செயலியில் தரப்பட்டுள்ள Noice எனும் வசதி செயற்படுத்திய நிலையில் இருந்தால் அமைதியான இடத்தில் ஒரு சிறிய சத்தம் ஏற்படுத்தப்பட்டாலும் உங்கள் Android சாதனம் மூலம் பலமான சத்தம் ஏற்படுத்தப்படும்.

  • அத்துடன் இந்த செயலியில் தரப்பட்டுள்ள Camera எனும் வசதி செயற்படுத்திய நிலையில் இருந்தால் உங்கள் Android சாதனத்தில் உள்ள Camera செயற்படுத்தப்படும் போது இந்த செயலி மூலம் ஏற்படுத்தப்படும் பலமான ஒலி உங்கள் Android சாதனத்தை இன்னும் ஒருவர் கையில் வைத்துள்ளார் என்பதை உங்களுக்கு உணர்த்தும். (இந்த வசதி கட்டணம் செலுத்தி பெறப்படும் பதிப்பிற்கு மாத்திரம்.)


Mobile Alarm System ஒலி அமைப்புக்கள்


இவைகள் தவிர இதன் அமைப்புக்களுக்கான பகுதி மூலம் எழுப்பப்படும் ஒலி எவ்வாறு இருக்க வேண்டும் மேற்குறிப்பிட்ட உணர் நிலைகளை நீங்கள் செயற்படுத்தி எவ்வளவு நேரத்துக்குப் பின் செயற்பட துவங்க வேண்டும் என்பன போன்ற அமைப்புக்களை எமது விருப்பத்திற்கு ஏற்ப தீர்மானிக்க முடியும்.

Mobile Alarm System அமைப்புக்கள் இடைமுகம்


அத்துடன் மேற்குறிப்பிட்ட சந்தர்பங்களில் உங்கள் ஸ்மார்ட் சாதனத்தில் கையை வைப்பவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்கு இதில் தானாகவே புகைப்படம் எடுக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. இது போன்ற சந்தர்பங்களில் உங்கள் Android சாதனத்தின் எந்த கேமரா (Back or Front) பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இதன் அமைப்புக்களுக்கான பகுதியின் ஊடாக தெரிவு செய்ய முடியும்.

இதற்கு ஒரு படி மேலாக இதன் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பதிப்பில் மேற்குறிப்பிட்ட சந்தர்பங்களின் போது உங்களுக்கு தானாகவே அழைப்புக்கள் ஏற்படுத்தப்படும் வகையிலும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் வகையிலும் அமைப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

இருப்பினும் சாதாரண ஒரு பயனருக்கு இதன் இலவச பதிப்பில் தரப்பட்டுள்ள வசதிகளே போதுமானது.


நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download Mobile Alarm System Lite (Free)

Download Mobile Alarm System ($1.24)


தொடர்புடைய இடுகை: கட்டணம் செலுத்தி பெறவேண்டிய செயலிகளை இலவசமாக பெற உதவும் ஸ்மார்ட் சாதனத்துக்கான செயலி (Android/iOS)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top