இது Lenovo நிறுவனம் மலிவு விலையில் அறிமுகப்படுத்தும் ஒரு ஸ்மார்ட் போன் ஆகும்.

ஸ்மார்ட் போன் lenovo

 A2010 என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இது Android இன் புதிய இயங்குதளமான Android 5.1 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.


மேலும் 4.5 அங்குல திரையை கொண்டுள்ள இது 1.0GHz வேகத்தில் இயங்கக்கூடிய Quad-core MediaTek MT6735M 64-bit processor ஐ தன்னகமாக கொண்டுள்ளது.

அத்துடன் 8GB உள்ளக நினைவகத்தை கொண்டுள்ள இதன் நினைவகத்தை microSD Card ஐ பயன்படுத்தி மேலும் 32GB வரையில் அதிகரித்துக் கொள்ள முடியும்.


Dual SIM வசதி கொண்டுள்ள இது 2MP தெளிவுத்திறனில் அமைந்த முன்பக்க Camera ஐ கொண்டுள்ள அதே நேரம் 5MP தெளிவுத்திறனுடைய பிரதான Camera ஐ கொண்டுள்ளது.

4G LTE வலையமைப்புக்கும் ஆதரவு அளிக்கக்கூடிய இது WiFi, Bluetooth 4.0, GPS போன்ற வசதிகளுடன் 2000mAh வலுவுடைய Battery ஐ கொண்டுள்ளது.இவைகள் தவிர 66.5 மில்லிமீட்டர் நீளம், 131.5 மில்லிமீட்டர் அகலம் 9.9 மில்லிமீட்டர் தடிப்பை கொண்டுள்ள இதன் நிறை 137 கிராம் ஆகும்.

குறைந்த விலையில் கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த பயனளிக்கும். இதன் விலை 4,990 இந்திய ரூபாய்களாக குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 76 அமெரிக்க டொலர்கள் ஆகும்.


Sources: Foneareana 

Love to hear what you think!

2 comments:

 
Top