இன்றைய உலகில் சமூக வலை தளங்களானது அவரவர் வாழ்வில் முக்கிய ஒரு அம்சமாக மாறியுள்ளது.

சமூக வலை தளங்கள்


அன்றாடம் உலகில் நடக்கும் விடயங்களை மட்டுமால்லாது உள்ளூரில் நடக்கும் விடயங்களை கூட உடனுக்குடன் அறிந்து கொள்ள வழிவகுக்கும் சமூக வலை தளங்களானது உறவுகளை பேணுவதற்கும் நட்பு வட்டாரங்களுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதற்கும் என பல்வேறு பயன்களை தருகின்றது.

எனவே அனைவரும் இன்று இணையத்தை நோக்கி படையெடுக்க துவங்கி இருப்பதுடன் அதிலும் Facebook பயன்படுத்துவதற்காகவே அதிகமானவர்கள் இணையத்திற்கு வருவதனையும் உணர முடிகின்றது.

எது எப்படியோ இன்றைய சமூக வலைதளங்களின் முதல்வனான Facebook தளமானது மாதாந்தம் 1.44 பில்லியன் பயனர்களால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் காலத்துக்குக் காலம் புதுப்புது வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வரும் Facebook தளத்தில் நாம் அறியாத எத்தனையோ வசதிகள் தரப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் நீங்கள் உங்களது நண்பர் ஒருவரை நேரடியாக நன்கு அறிந்திருந்தாலும் கூட நீங்கள் அவரை Facebook தளத்தில் உள்ள உங்கள் நட்பு வட்டாரத்தில் இணைக்க வேண்டும் எனின் நீங்கள் அவருக்கு அனுப்பும் கோரிக்கையை (Friend Request) அவர் ஏற்றாக வேண்டும் தவறும் பட்சத்தில் அவர் உங்களின் Facebook நண்பர்களின் பட்டியலில் இணைக்கப்பட மாட்டார்.

எனவே நீங்கள் அவரை பின் தொடர்பவராகவே (Follower) கருதப்படுவீர்கள். இதனால் அவர் பகிரங்கமாக (Public) பகிரக்கூடிய நிலைத் தகவல்கள் (Status Update)உங்களை வந்தடையும் என்றாலும் நீங்கள் பகிரக்கூடிய நிலை தகவல்கள் அவரின் News Feed இற்கு செல்லாது.


மேலும் அவர் இணைப்பில் (Online) இருக்கும் போது அவர் தற்பொழுது இணைப்பில் தான் இருக்கிறார் என்பதை அறிய முடியாது எனினும் அவர் நீங்கள் அனுப்பிய ஏற்றுக் கொண்டால் இதனை அறிந்து கொள்ள முடியம்.

எனவே நீங்கள் நட்பு கோரிக்கையை அனுப்பிய பின்னும் இதுவரை மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் உங்கள் நட்பு கோரிக்கையை ஏற்காமல் இருக்கும் நண்பர்களை அறிந்து கொள்ளவும் அவ்வாறு அனுப்பப்பட்ட கோரிக்கையை நீங்கள் விரும்பினால் ரத்து செய்து கொள்ளவும் Facebook தளத்தில் வசதி தரப்பட்டுள்ளது.

நீங்களும் இதனை மேற்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.

  • உங்கள் Facebook கணக்கிற்குள் நுழைந்து கொள்க.
  • பின் Facebook இன் வலது மேல் மூலையில் Notification, Message என்பவற்றுடன் தரப்பட்டிருக்கும் Friends Request button ஐ சுட்டுக.
முகநூல் நண்பர் கோரிக்கை அனைத்தும் பார்க்க

  • இனி அதன் கீழ் பகுதியில் தோன்றும் See all என்பதனை அலுத்துக.
  • பின்னர் அதில் உங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து நண்பர் கோரிக்கைகளும் பட்டியல் படுத்தப்படும்.
  • பின் Respond to Your xxx Friend Requests என்பதற்குக் கீழ் தரப்பட்டிருக்கும் View Sent Requests என்பதை அலுத்துக.
முகநூலில்ஏற்கப்படாத நண்பர் கோரிக்கைகளை பார்க்க

  • இனி நீங்கள் நபர்களாக இணைக்க யார் யாருக்கு எல்லாம் கோரிக்கைகளை அனுப்பினீர்களோ அவ்வாறு அனுப்பப்பட்டு இது வரை கோரிக்கையை ஏற்காதவர்களது பெயர்கள் அனைத்தும் பட்டியல் படுத்தப்படும்.
முகநூலில் அனுப்பிய நண்பர் கோரிக்கையை ரத்து செய்ய

  • அவ்வாறு அனுப்பப்பட்ட கோரிக்கைகளை ரத்து செய்ய விரும்பினால் Friend Request Sent என்பதின் மேல் Cursor ஐ வைக்கும் போது தோன்றும் சாளரத்தில் Cancel Request என்பதனை அலுத்துக.
அவ்வளவுதான்.

பின்வரும் இணைப்பை சுட்டுவதன் மூலமும் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக செல்லலாம்.


 View Sent Requests

தொடர்புடைய இடுகைகள்: Facebook தளத்தில் Graph Search வசதியை பயன்படுத்துவது எவ்வாறு? (Useful Graph Search Commands)
Love to hear what you think!

1 comments:

 
Top