அண்மையில் கூகுள் நிறுவனமானது தனது கட்டமைப்பில் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.


கூகுள் தொடர்பாடல் சேவை


இவ்வாறான மாற்றங்களின் தோற்றமே Alphabet எனும் தாய் கம்பனியும் ஆகும்.

கூகுள் தனது அனைத்து படைப்புக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியை Alphabet என்பதன் ஊடாக மேற்கொள்ள உள்ளது. எனவே தற்பொழுது கூகுளும் கூட  Alphabet இன் ஒரு பகுதியே.எது எப்படியோ கூகுள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் மாற்றங்களில் அதன் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்திற்கான முக்கியத்துவத்தினை குறைத்து வருகின்றது.

ஆரம்பத்தில் யூடியூப் தளத்தில் கருத்துரை இடுவதற்கு கூகுள் பிளஸ் கணக்கு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என பயனர்களை கட்டாயப்படுத்தி வந்த Google நிறுவனம் பின்னர் அந்த வற்புறுத்தலை தளர்த்திக் கொண்டது.

பின்னர் கூகுள் பிளஸ் சேவையுடன் சேர்த்து வழங்கப்பட்ட Google Photos சேவையும் கூட கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தில் இருந்து அண்மையில் வேறு பிரிக்கப்பட்டது எனவே தற்பொழுது Google Photos சேவையை https://photos.google.com எனும் தளத்தில் இருந்து பெற முடியும்.

அதே போல் தற்பொழுது கூகுள் பிளஸ் சேவையுடன் நகமும் சதையும் போல் இருந்து வந்த Hangout வசதியும் கூட கூகுள் பிளஸ் தளத்தில் இருந்து வேறு படுத்தப்பட்டுள்ளது. 

கூகுள் Hangout

எனவே தற்பொழுது Hangouts சேவையை https://hangouts.google.com எனும் முகவரியில் இருந்து உங்களது கூகுள் கணக்கை பயன்படுத்தி நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.Hangouts சேவைக்கு என்றே கூகுளால் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள https://hangouts.google.com எனும் தளத்தில் இருந்து நீங்கள் வழமை போல் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளவும் இனி கூகுள் பிளஸ் பக்கமோ ஜிமெயில் பக்கமோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 https://hangouts.google.com எனும் பக்கத்தில் Video Call, Phone Call, Massage என பிரதானமாக மூன்று Button கள் தரப்பட்டுள்ளது. இதில் Video Call என்பதை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் பெறப்படும் இணைய இணைப்பை இன்னும் ஒருவருக்கு வழங்குவதன் மூலம் உலகில் உள்ள எந்த ஒருவருக்கும் நினைத்த மாத்திரத்தில் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் இந்த சேவையை Android சாதனங்களின் ஊடாக பெறுவதற்கான Hangout செயலியிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் இடைமுகமும் மேலும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் Android சாதனத்தில் Hangout சேவையை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் இணைப்பின் மூலம் Hangout செயலியை உங்கள் Android சாதனத்துக்கு நிறுவிக் கொள்ளலாம்.Love to hear what you think!

1 comments:

 
Top