1998 ஆம் ஆண்டு இணைய தளங்களை தேடிப்பெறக்கூடிய வெறும் ஒரு தேடு இயந்திரமாக தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்ட கூகுள் தொடர்ச்சியான அதன் வளர்ச்சியால் Blogger, Gmail, Google Maps, YouTube, Android, Chrome, Google Plus போன்ற அதன் கவர்சிகரமான தயாரிப்புக்கள் மூலம் இணைய உலகை தன் ஆக்கிரமிப்புக்குள் உட்படுத்திக் கொண்டது.

Google Alphabet


இது ஒருபக்கம் இருக்க Calico, Nest, Fiber, Google Ventures, Google Capital, Google X போன்ற தனித்தனி கம்பனிகளையும் கூகுள் நிருவகித்து வருகின்றது.


இவ்வாறு பரந்து வளர்ந்து விட்ட கூகுளின் தயாரிப்புக்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது கூகுள் நிறுவனம்.


இது வரை கூகுள் என தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்தி வந்த கூகுள் இதன் பின் Alphabet என்றே தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ள போகின்றது.


எனவே இதன் பின் Alphabet என்பது தாய் கம்பனியாக இயங்கும் அதேவேளை கூகுள் என்பது அதன் ஒரு பகுதியாகவே இயங்கும். 

அத்துடன் Google நிறுவனத்தில் இது வரை துணை தலைவராக இயங்கி வந்த சுந்தர் பிச்சை என்பவர் இதன் பின்னர் கூகுளின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட இருக்கும் அதேவேளை Alphabet இன் தலைவராக Sergey Brin உம் பிரதம நிறைவேற்று அதிகாரியாக Larry Page உம் செயற்பட உள்ளனர்.

சுந்தர் பிச்சை என்பவர் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவர் சென்னையில் பிறந்தவராகும்.

 Alphabet இன் இணைய முகவரி இதுதான் ABC.XYZ

எது எப்படியோ இணைய வரலாற்றில் 2015 இல் பிறந்த தாயை விட 1998 இல் பிறந்த Google பிள்ளைக்குத் தான் வயது அதிகம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top