ஆரம்பத்தில் இணையமானது வெறும் தகவல்களை தேடிப்பெருவதை நோக்கமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இன்று அந்த நிலைமை முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

இணைய உலகம்


தொலை தூரத்தில் இருக்கக்கூடிய ஒருவரை தொடர்பு கொள்வது தொடக்கம் தமது பொழுது போக்கிற்காக இணையத்தை பயன்படுத்தும் நிலைமையும் இன்று உருவாகி உள்ளது.


எனவே ஏராளமான கருமங்களுக்கு துணைபுரியக்கூடிய இன்றைய இணையமாது எமது புகைப்படங்களுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றது.

அந்த வகையில் எமது புகைப்படங்களுக்கு மொசைக் விளைவை ஏற்படுத்திக்கொள்ள உதவுகின்றது Ericandrewlewis எனும் இணையதளம்.


அதாவது நீங்கள் உள்ளிடும் புகைப்படமானது சிறு சிறு படங்களை கொண்டு உருவாக்கப்படும். 

மொசைக் (mosaic) LOGO

குறிப்பிட்ட தளத்தின் மூலம் மொசைக்‬ (mosaic) விளைவுகளில் அமைந்த புகைப்படங்களை மிக இலகுவாக உருவாக்கிக் கொள்ள முடியும்.


  • நீங்களும் இந்த தளத்தை பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பு மூலம் குறிப்பிட்ட இணையதளத்துக்கு செல்க.
  • பின் குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள Choose File என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் கணினியில் இருக்கக் கூடிய புகைப்படம் ஒன்றை தெரிவு செய்து தரவேற்றுக.


அவ்வளவுதான். 

இனி சற்றே நேரத்தில் குறிப்பிட்ட புகைப்படம் மொசைக் விளைவுடன் தோன்றுவதை அவதானிப்பீர்கள்.


பிறகென்ன குறிப்பிட்ட புகைப்படத்தை Right Click செய்து Save Image என்பதன் மூலம் உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளவும் Facebook, Viber, Whatsapp போன்ற சேவைகளின் ஊடாக உங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் முடியும்.

நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Visit to Ericandrewlewis

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top