சுவாரஷ்யம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும் உறவினர் நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது என்றால் சிலருக்கு அலாதிப் பிரியம்.

திடீர் அதிர்ச்சி


இவ்வாறான செயற்பாடுகளுக்கு என இன்று அதிகமானவர்கள் தமது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தத் துவங்கி உள்ளனர். இதற்கென பல சுவாரஷ்யமான செயலிகள் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம்.அந்தவகையில் உங்கள் Android சாதனத்துக்கு உண்மையிலேயே அழைப்புக்கள் ஏற்படுவது போன்ற போலியான தோற்றத்தை தரக்கூடிய செயலியை நாம் எமது முன்னைய பதிவின் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போன்ற மாயை தோற்றத்தை தரக்கூடிய ஒரு செயலியே Broken Screen எனும் Android சாதனத்துக்கான செயலியும் ஆகும். 

Cracked Screen எனும் Android செயலி

இந்த செயலியானது உங்கள் Android சாதனத்தின் திரை வெடித்திருப்பது போன்ற மாயை தோற்றத்தை தரக்கூடியது.


இதனை பயன்படுத்துவது மிகவும் இலகு. உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்ட இதனை சுட்டிய பின் குறிப்பிட்ட செயலி இயங்கத்துவங்கும். பின்னர் உங்கள் Android சாதனத்தின் திரையை நீங்கள் தொடும் போது உங்கள் Android சாதனத்தின் திரை வெடித்திருப்பது போன்ற மாயை தோற்றத்தை தரும்.

இது சுவாரஷ்யமான ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட செயலி என்பதாலோ என்னவோ இதனை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட Android பயனர்கள் தரவிறக்கி பயன்படுத்தி வருகின்றனர்.

நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download Cracked Screen Prank For AndroidImage Credit: dreamstime

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top