விண்டோஸ் கணினியில் எமது விருபத்திற்கு ஏற்றாவாறு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த முடிகின்றமை அனைவரும் நன்கு அறிந்த விடயமாகும்.

விண்டோஸ் கணினி


அந்த வகையில் எவ்வித மென்பொருள்களினது உதவியும் இன்றி கணினியில் மேற்கொள்ள முடியுமான ஏராளமான வசதிகள் பற்றி நாம் ஏற்கனவே எமது முன்னைய பதிவுகள் மூலம் பார்த்திருந்தோம்.
இது போன்ற இன்னும் பல மாற்றங்களை மிக இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள Winaero Tweaker எனும் மென்பொருள் உதவுகின்றது.

 Winaero Tweaker கணினி மென்பொருள்

இந்த இலவச மென்பொருள் மூலம் உங்கள் கணினியின் Processor, RAM, Display தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியுமான அதேவேளை பின்வரும் மாற்றங்களையும் மேற்கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை: கணினியின் திரையில் சுவாரஷ்யமான பல வித்தைகள் புரிந்திட உதவும் அற்புதமான மென்பொருள் 


  • கணினி வன்தட்டின் வெவ்வேறு வகையான பாகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்தினை, அந்த பாகத்துக்கான பெயரின் முன்னாள் வைக்க முடியும்.

கணினி விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர்


  • Desktop iCon களில் உள்ள அம்புக்குறி அடையாளத்தினை நீக்கிக் கொள்ளவோ அல்லது அதற்கு பதிலாக வேறு அடையாளங்களை பயன்படுத்தவோ முடியும்.


Desktop திரை


  • Windows Explorer சாளரத்தின் ஓரங்களின் (Border) அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
  • விண்டோஸ் Title Bar மற்றும் Scroll Bar களின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.


விண்டோஸ் ஸ்க்ரோல் பார்


  • iCon களின் அளவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள முடிவதுடன் அவற்றுக்கான எழுத்துருக்களின் தோற்றங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
  • Boot Menu தொடர்பான பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
  • Lock Screen தோன்றாத வகையில் அமைத்துக் கொள்ள முடியும்.
  • கோப்புக்களை Drag & Drop செய்யும் போது அவைகள் Copy செய்யப்பட வேண்டுமா? அல்லது Move செய்யப்பட வேண்டுமா? அல்லது அதற்கான Shortcut உருவாக்கப்பட வேண்டுமா? என்பதனை தீர்மானிக்க முடியும்.


இந்த மென்பொருளை பயன்படுத்தி இவைகள் தவிர இன்னும் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top