விண்டோஸ் கணினியில் உள்ள Notepad மென்பொருளை பயன்படுத்தி ஏராளமான சாகசங்களை செய்ய முடியும்.


வைரஸ் உருவாக்குதல்


அந்தவகையில் இதன் மூலம் கணினிக்கு தீங்கு விளைவிக்கும் நிரல்களை கூட உருவாக்கிக் கொள்ள முடியுமான அதே வேலை கணினிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத சுவாரஷ்யமான நிரல்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

பின்வரும் நிரலானது உங்கள் நண்பருக்கு ஒரு அதிர்ச்சியுடன் கலந்த ஏமாற்றத்தை கொடுக்க வல்லது.

பின்வரும் முறையில் உருவாக்கப்பட்ட நிரலை Double Click செய்யும் போது போலியான அச்சுறுத்தல் செய்திகளை தொடர்ச்சியாக தோன்றச்செய்ய முடியும். 

அவ்வாறு உருவாக்கப்படும் நிரல்கள் மூலம் தோன்றக்கூடிய செய்திகள் எச்சரிக்கையூட்டும் செய்திகளாக தோன்றுவதால் உங்கள் நண்பர் ஒரு கணம் கதி கலங்கி நிற்பார் என்பதில் ஐயமில்லை. மாறாக இது கணினிக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தப் போவதில்லை.

இவ்வாறான ஒரு நிரலினை உருவாகிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.

  • கணினியின் Desktop இல் Right Click செய்து New Text Document ஒன்றை உருவாக்கிக் கொள்க.
டெஸ்க்டாப்பில் வலது க்ளிக் செய்தல்

  • இனி பின்வரும் நிரல்களை Copy செய்து குறிப்பிட்ட Text Document ஒன்றில் Past செய்து கொள்க.
@echo off
msg * Warning your computer has detected a virus.
msg * To remove the virus click OK or close this box
msg * Your Hard drives are now being formatted
msg * Please wait ...........
msg * Hey Friend Don't worry
msg * This is created by www.tamilinfotech.com
msg * Just For Fun. Cool......

மேலுள்ள நிரல்களை Copy செய்துகொள்ள====>  இங்கே சுட்டுக. 
  • பின்னர் Notepad இல் File ===> Save As என்பதை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் File name என்பதில் நீங்கள் விரும்பும் பெயருடன் .bat எனவும் Save as type என்பதில் All Files என்பதையும் தெரிவு செய்து குறிப்பிட்ட நிரலை கணினியில் ஏதாவது ஓரிடத்தில் சேமித்துக் கொள்க.
save as பகுதி

அவ்வளவு தான் 

இனி அதனை உங்கள் நண்பருக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலமோ Facebook மூலமாக அதனை உங்கள் நண்பருக்கு அனுப்புவதன் மூலமோ உங்கள் நண்பருக்கு ஒரு அதிர்ச்சி கலந்த ஏமாற்றத்தை கொடுக்கலாம்.

மேலதிக தகவல்: மேலே தரப்பட்டுள்ள நிரலில் உள்ள செய்திகளுக்கு பதிலாக நீங்கள் விரும்பும் செய்திகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top